Saturday, July 24, 2010

தூக்கத்தில் புலம்புவேன்

கண்டதும் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை
உன்னை பார்த்த பின் நம்புகிறேன்
கண்ண்டதும் கவிதை என்பதை.


நீ நடந்தால் உன் காலடி சுவடுகள் மண்ணில் பதிவதில்லை
வியந்தேன்!  நீ எத்தனை மென்மையானவள் என்று.
நீ ஒரு பார்வைதான் பார்த்தாய் அதன் கணம் தாங்கமுடியவில்லை
உணர்ந்தேன்! நீ எத்தனை வலிமையானவள் என்று.

இந்த வருடம் சிறந்த பாடலுக்கான தேசிய விருது
உன் சிரிப்புக்குதான் என்றேன் மீண்டும் சிரித்தாய் 
ஆஸ்காரும் உனக்குதானோ?

Wednesday, July 21, 2010

யுவன்

என்னோட பெஸ்ட் பிரெண்ட் யாருன்னு கேட்டா கண்டிப்பா என்னோட IPODதாங்க. எப்பவும் என்கூடவே என் மூடுக்கு ஏத்தமாதிரி இசையை தரும் குறிப்பாக என்னை தினமும் தூங்கவைப்தே இதுதாங்க. 123musiq.com  இது என்னோட  ஆஸ்தான இனையதளம் புதிய பாடல்கள் அனைத்தும் உடனுக்குடன் கிடைக்கும். இதில் ரஹ்மான், இளையராஜா, யுவன்  இவர்களது  பாடல்களை காதிருந்தாவது டவுன்லோட் செய்துவிடுவது வழக்கம். இவர்களின் இசைக்காக மட்டுமல்ல இவர்களின் குரல் மற்றும் பாடும் ஸ்டைல் எனக்கு விருப்பமானவை. இதில் யுவன் பாடிய பாடல்கள் என்றால் நாளெல்லாம் கேட்டுக்கொண்டேயிருப்பேன். அதற்காக IPOD ல் நான் வைத்துள்ள ஒரு playlist ஐ உங்கலோடடு பகிர்ந்துகொள்ள  விரும்புகிறேன். என் விருப்ப வரிசைப்படி
     பாடல்                                                  படம்                                               
என் காதல்                                   புன்னகை பூவே
போகாதே                                     தீபாவளி
ஒரு கல் ஒரு கண்ணாடி   சிவா மனசுல சக்தி
என் காதல் சொல்ல              பையா
பொய் சொல்ல இந்த            ஏப்ரல் மாதத்தில்
நீதானே                                         சர்வம்
காற்றுகுள்ளே                           சர்வம்
கடலோரம் ஒரு                      குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்
என் கண்ணோடும்                 அறிந்தும் அறியாமலும்
இது காதலா                               துள்ளுவதோ இளமை
ஏதேதோ எண்ணங்கள்         பட்டியல்
நட்புக்குள்ளே                            சென்னை-28
உனக்ககதானே                         கட்டறது தமிழ்
யாரோடு யாரோ                     யோகி
தாக்குதே கண் தாக்குதே    பானா காத்தாடி
ஹோ ஷலா ஹோ               காதல் சொல்ல வந்தேன்
இறகை போலே                       நான் மகான் அல்ல
சொல் பேச்சு கேட்காத        தில்லாலங்கடி                  
கண்முன்னே எத்தனை         துள்ளுவதோ இளமை
வீடுதோறும் சச்சின்              சென்னை-28
ஏனோ என் கண்கள்               கள்வனின்  காதலி
கிளியோபாட்ரா                        உனக்காக எல்லாம் உனக்காக 

 இரவில் கண் மூடி தனிமையில் முடிந்தால் ஹெட் போனில் கேட்டுபாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். குறைந்தபட்சம்  நல்ல  தூக்கமாவது கிடைக்கும்.


பொடுசு ஜோசியம்: இந்த வருடம் சிறந்த பாடலுக்கான தேசிய விருது  கண்டிப்பாக "ராவணன்" படத்தில் வரும்" உசுரே  போகுதே"  (தமிழ்/ஹிந்தி)  பாடலுக்குதான்னு   நான்  சொல்லறேன் நீங்க?...............  

Monday, July 19, 2010

முதல் பதிவு

என் முதல் வணக்கம்,
எப்பொழுதாவது ப்ளாக் படிக்க மட்டுமே நேரம் கிடச்ச எனக்கு இப்ப கொஞ்சம் எழுதுவதற்கும் நேரம் கிடைச்சதால யோசிக்காம உடனே கடைய திறந்தாச்சி இனி காசு கொடுத்தாவது கஸ்டமர மடக்கிபோடனும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்).

சரி என்ன, எப்படி, எதபத்தி, எவள்ளவு எழுதுறது ? (ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே). நாம ஏன் அத பத்தி யோசிக்கணும் என்ன வேணும்னாலும்,எப்படி வேணும்னாலும், எதபத்தி வேணும்னாலும், எவள்ளவு வேணும்னாலும் (என்னடா வேணும் உனக்கு) எழுதுவதர்க்காகதானே  ப்ளாக் மத்ததெல்லாம் படிப்பவர்கள் ----------- (கோடு போட்ட இடத்துல என்ன எழுதனும்னு போக போக நீங்களே புரிந்துகொள்வீர்கள்).

"பொடுசு" என்னடா பேரு இதுன்னு எப்படியும் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் (செய்யட்டுமே)  என் வீட்டிலும்,  உறவினர்களையும்  கேட்டால்  இப்பவும் கண்ணை அகல விரித்து பல கதைகள் சொல்வார்கள் எப்படிபட்ட கேரக்டர்  அவன்னு. எங்கள் வீட்டு எல்லா விசேஷங்களிலும்  எல்லாரும்  ஒன்னா சேர்ந்தா கண்டிப்பா  இந்த  கேரக்டர  பத்தி பேசாம இருக்கமடாங்க (பில்டப் போதுமா).  

எல்லை கடந்த பிடிவாதம், எப்பவும் விளையாட்டு, ஏகப்பட்ட கற்பனைகள்,  கோபம், சண்டை என்று இருந்தாலும் கொஞ்சம் படிக்கவும் செய்வான். படிபடியாக  பொடுசுக்குள்  இருந்து இந்த செந்திலை  வெளியே  எடுக்க  என்  குடும்பத்தினர்  மிகவும்  சிரமபட்டார்கள்  என்பதை  நான்  ஒப்புகொண்டேயாகவேண்டும்.ஆமாங்க என்னை சின்ன வயசுல எல்லாரும் அப்படித்தான்  கூப்பிடுவாங்க. இப்ப  எப்படின்னு  கேட்குறிங்களா இப்ப 5' 7" உயரம் 78  கிலோ  எடை  யாரும்  அப்படி  கூப்பிட முடியது அனால் என் அண்ணன்கள், அக்காக்கள் என்னை இப்பவும் பொடுசுன்னுதான் கூப்பிடுவாங்க ஆசையாய் (பாசம் கண்ணை மறைப்பதால்  அவர்களுக்கு  நான் வளர்ந்ததே தெரியவில்லைபோல - நல்லதுதானே). 
     
பொடுசுக்குலேயிருந்த செந்திலதானே வெளியே எடுத்தார்கள் அனால் செந்திலுக்குள்  எப்பவும் பொடுசு இருந்துகொண்டேதானே  இருக்கான்.  அப்பப்ப  மட்டுமே  எட்டிபார்துக்கொண்டிருந்தவன் இனி  பதிவுகள்  வழியாக  உங்களுடன் எப்போதும் உங்கள் ஆசிர்வாதத்துடன் வெளியதாங்க  இருப்பான். (என்னடா உள்ளே வெளியேன்னு மங்காத்தாவா  ஆடுற).

கை பிடித்து அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிகையுடன்....

பொடுசு


  
Related Posts with Thumbnails