Sunday, August 1, 2010

யாதும் ஊரே யாவரும் கேளீர்

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று  தமிழ்  கூறும்  நல்லுலகம்  உரைத்தாலும் நம் மனது கேட்பதாயில்லை. சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர்  போல  வராது  என்பது  யாராலும்  மறுக்க  முடியாத உண்மை. நாம் எங்கு சென்றாலும் எத்தனை காலம்  ஆனாலும் பிறந்து வளர்ந்த ஊரின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் அன்றாட  வாழ்கை  முறை இவைதான் நம் அடிப்படையாக அமைகின்றன. சென்ற இடத்திற்காகவோ, வேலைக்காகவோ அல்லது  வசதிகேற்ப மாற்றிக்கொள்ளும் வாழ்கை முறை என்பது போலியான முகமுடியை போன்றதே மாற்றிக்கொண்டே இருக்கலாம் அனால்  வாழ்ந்ததற்கான  ஆத்மார்த்தமான  திருப்தியோ, அர்த்தமோ, சுவடுகளோ இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. 

கவனிக்க வாழ்கை முறை என்பது வேறு வாழ்கை தரம் என்பது வேறு, வாழ்கை தரத்தை மேம்படுத்துவதுதான் மனித வாழவின் ஆதாரம்  அதற்கான தேடலும், முயற்ச்சியும்தான் நம் ஒவ்வொருவருடைய கடின உழைப்பிற்க்கும்,  முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைகிறது  இல்லையேல் இன்னமும் நாம் கற்கால மனிதர்களாகவேதான் இருந்திருப்போம். ஆனால் நமது வாழ்கையின் தரம் வளர்ந்த  வேகத்தில் சிந்தனையின்  தரம் வளரவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்வதற்கு  நமக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது நல்ல புத்தகங்களே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டு அவற்றை தேடி வாங்கி படிப்பது என்பது அதனை எளிதான காரியமாய் எனக்கு தெரியவில்லை. குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் அதிலும் எங்கள் ஊர் போன்ற கிராமத்தில் இருப்பவர்களின் நிலைமை மிகவும் கவலைகிடமானதே. பாடப்புத்தகம் அதிலும் ஆசிரியர் சொல்லிகொடுப்பதை தவிர வேறு ஏதும் அவர்களுக்கு எட்டுவதில்லை. வீடுதோறும் இன்று தொலைகாட்சி பெட்டி வந்துவிட்டாலும் அவற்றின் செயல்பாடுகளும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை பற்றியும் நான் உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வாக நான் கருதுவது "நூலகங்கள்". நல்ல பல நூல்களை தொகுத்து எளிதாக அனைவரும்  பயன்படுத்தும்  வகையில்  இருப்பதே நூலகத்தின் சிறப்பு மேலும் நூலகத்தின் பயன்பாடுகளை பற்றி இந்த ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது. அப்படி ஒரு நூலகம் எங்கள் ஊரிலும் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன் அந்த   நூலகத்தை  முற்றிலுமாக மூடிவிட்டார்கள்  அதற்காக எங்கள் ஊரில் யாரும் இதுவரை வருத்தபட்டதகவோ மீண்டும் நூலகம் திறப்பதற்கு சிறு முயற்சி எடுத்ததாகவோ எந்த தகவலும் இல்லை.

அனால் எப்படியோ சிரமப்பட்டு சுத்துப்பட்டு பத்னெட்டு பட்டியும் மகிழ்சியோட இப்ப எங்க ஊருக்கு தினமும் வந்துபோகும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திறந்தார்கள்!!! என்னென்னு புரியலையா? அதாங்க  டாஸ்மாக். இப்போ எங்க ஊரே  ஜகஜோதியாய்  இருக்கு  தினமும்  சுற்றிவுள்ள பல ஊர்களிலுருந்தும் புதிது புதிதாய் ஆட்கள் வருவதும் போவதுமாய்  இருக்கிறார்கள்.   இப்ப புரிஞ்சுதுங்க இந்த  பதிவோட  முதல்  வாக்கியத்திற்கு அர்த்தம். 

5 comments:

thambi said...

பொடுசு அவர்களே......

உங்களின் சமுகத்தின் மீதான அக்கரை இந்த பதிவின் மூலம் விளங்குகிறது.
இந்த அக்கரை எழுத்துடன் நிற்க வேண்டாம் என்பது என்னுடைய ஆவல்.உங்கள் ஊர் நூலகம் மூடப்பட்டதன் காரணத்தை கண்டறிந்து, அந்த குறைகளை களைந்து திரும்பவும் அது திறன்பட செயல்பட முயற்சி எடுக்கவும் என்பது எனது மேலான வேண்டுகோள் !!!!!!!!
சிந்தனையை வளர்க்கும் நூலகத்தின் மீது அக்கரை இல்லாது சிந்தனையை சீரழிக்கும் மதுவின் மீது மக்கள் மோகம் கொண்டு கடைவிரிக்க கைக்கொடுக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய சீரழிவு என்பது தெரிகிறது.இனி மாற்றம் கொண்டு வருவது யார்????
ஒரு மனிதன் சமுதாயத்தை திருத்துவதற்கு எழும் போது அவன் முதலில் தன்னை திருத்தி கொள்ள வேண்டும், பின்பு குடும்பம்,அடுத்து நண்பர்கள் என்று படிபடியாக முயல வேண்டும்.
ஆனால் இன்றோ அய்யோ பரிதாபம்........ சிலர் பார்(சாராய கடை)இல்லாத விடுதியில் தங்குவதற்கு விரும்புவதில்லை.,பார்(சாராய கடை)விடுமுறை விடுவதையும் விரும்புவதில்லை.இப்படி இருந்தால்??????????????
"சரி சரி வேற வேலையை பாருங்க" என்று பொடுசு சொல்வது விளங்குகிறது

ananth said...

NALLA SINDANAI....................

hari krishnan said...

திரு.செந்தில் அவர்களே,
இந்த பதிவில், நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாய் இருபது நல்ல புத்தகங்களே என்ற விஷயமும், நூலகங்கள் வேண்டும் என்ற ஒரு கருத்தை தவிர வேறொன்றும் இல்லை.

உங்களின் மற்ற விஷயங்களில் நிறைய கருத்து முரண்பாடுகள் உள்ளது.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.
வாழ்கையின் தரம் வளர்ந்த அளவிற்கு வேகத்தில் சிந்தனையின் தரம் வளரவில்லை என்று கூறி இருகிறீர்கள்.
வாழ்கையின் தரத்தை உயர்த்த, மனிதன் சிந்திக்கவே தான் அவன் தரம் உயர்ந்தது. இந்த சிந்தனை அணைத்து துறைகளிலும் உண்டு.
இசை கலைஞ்சன் சிந்திக்கவே தான் நல்ல இசை கிடைக்கிறது,
ஆராய்ச்சியாளன் சிந்திக்கவே தான் நல்ல கண்டுபிடிப்புகள்,
இன்னும் பல.....

இது போல நிறைய இடங்களில் நீங்கள் தவறான கருத்துகளை வெளி இட்டு இருக்கீறீர்கள். கலாசாரம், பழக்க வழக்கங்கள் போன்ற விஷயத்திலும். எனவே, ஒரு பதிவை வெளியிடும் முன் அதை பற்றி வாதங்கள் எழாதவாறு வெளி இடவும்.

ஹரி.

AKB said...

அன்பு QGX தோழா,

DEMOBE என்று சொன்னவனை எல்லாம் DEMOB பண்ணி அசராம தனி ஆழ கலக்குர உன்க்கு இது இல்லாம் ஒரு தூசு,AUTOCAD SHORTCUT இந்த பொடுசு சொல்லும் நாங்க நம்புரோம்.உன் நல்ல எண்ணதிர்க்கு இந்த பொடுசு வலை தளம் ரொம்ப பெருசா வாழர மேன்மேலும்
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன்,பஞ்ச் பாலா.

seenu said...

super................ i want more

Post a Comment

Related Posts with Thumbnails