Wednesday, August 4, 2010

புடிச்சிருக்கு

காலையில் நண்பர் ஒருவர் வேலைக்கு வரவில்லை  என்னானதோ?  விசாரிக்கலாம்  என்று கைபேசியில் அழைத்தேன் தூக்கத்தில் இருந்தவரிடம்....

 
ஹலோ என்னாச்சி வேலைக்கு வரல எதாவது பிரச்சனையா?
ஆமாம் செந்தில் இடுப்பு புடுச்சிருக்கு
யார் இடுப்பு?
என்னோட இடுப்புதான்!
உங்க இடுப்பு உங்கள்ளுக்கு புடிச்சிருக்கு இதுல என்ன பிரச்சனை?
(தூக்கத்தில் ஏதும் புரியாமல் அமைதி காத்தவரிடம் தொடர்ந்தேன்) 
எத்தனை நாளா உங்க இடுப்பு புடிச்சிருக்கு?
நேத்திலேர்ந்துதான்.....
அப்போ அதுக்கு முன்னாடி யார் இடுப்பு புடுச்சிருந்தது?
இப்படிதான் கடுப்பாயிருப்பாரோ?
  புரிந்துகொண்டார் போல திட்டுவதற்கு ஆரம்பித்தார் அழைப்பை  துண்டித்துவிட்டேன் பாவம் மீண்டும் தூங்கினாரோ என்னவோ.
ஆமாம் அப்படி நான் என்னத்த தப்பா கேட்டுட்டேன்???????

 


2 comments:

Abdulcader said...

அருமையான நகைச்சுவை...............
அது சரி இப்போ அந்த நண்பருக்கு யாருடைய இடுப்பு புடுச்சிருகாம்.

Unknown said...

நல்ல வேலை அந்த நண்பருக்கு
இடுப்பு புடிச்சி இருந்தது!!!!!!!!

இப்போ அந்த நண்பருக்கு யாருடைய
இடுப்பு பிடிச்சி இருகாம்னு காயலாங்கடைகாரர் கேட்டு இருக்கார்.
அவருக்கு ஒண்ணு சொல்லிக்கறேன்.
இப்போ அந்த நண்பருக்கு யாருடைய
இடுப்பு வேணும்னா புடிக்கட்டும்.
ஆகஸ்ட் 31, 2010 க்கு மேல ????????

Post a Comment

Related Posts with Thumbnails