Sunday, August 15, 2010

சுதந்திர தின கொண்டாட்டம்



எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இன்று எதாவது ஒரு பதிவு சுதந்திர  தினத்திற்காக எழுதிவிடவேண்டும் என்று ஆரம்பித்தேன் வெகுநேரமாக  யோசித்தும் என்ன எழுதுவது என்றுதெரியவில்லை  கண்மூடி  மனதை வெற்றிடமாக்கி மீண்டும் மீண்டும் யோசித்ததில்  ஒவ்வொரு  பருவத்திலும் எப்படி சுதந்திர தினத்தை  கொண்டாடினோம், மேலும்  ஒருசில  சுதந்திர போராட்ட   தியாகிகளின்  பெயர்கள்  மட்டுமே  மட்டுமே  நினைவிற்கு  வருகிறது  வேறு எதுவும் உணர்ச்சிபூர்வமாக  தோன்றவில்லை  என்றாலும்  பழைய  நினைவுகள்  நம்  உணர்சிகளை  கண்டிப்பாக  தட்டி  எழுப்பும்  என்ற நம்பிக்கையுடன்  தொடர்கிறேன். 

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் போது (ஒன்று முதல் நான்காம்  வகுப்பு வரை) அதிகாலையில் பள்ளிக்கு  சென்றால் பள்ளி வாயிலில்தோரணங்கள்,  கோலங்கள்,  ஒலிபெருக்கியில்  தேசபக்தி  பாடல்கள் என்று ஒரு பரவச  நிலையில்  ஆடிக்கொண்டே   உள்ளே சென்றால்  தலைமை ஆசிரியரோ  அல்லது  ஊர்  பெரியவர்கள்  யாராவது ஒருவர் தேசிய கொடியை ஏற்றுவார் அதிலிருந்து பூ விழுவதை அதிசயமாக பார்த்து கைதட்டிவிட்டு வரிசையில் சென்றால் ஒரு பைசா மிட்டாய் (ஒரு பைசா நடைமுறையில் இல்லை என்றாலும் ஐந்து பைசாவிற்கு ஐந்து மிட்டாய் என்பதால்) ஆரஞ்சு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களில் கைநிறைய அள்ளி கொடுப்பார்கள். ஐந்து அல்லது ஆறு மிட்டாயில் கை  நிறைந்து  விடும்  உண்மையில்  மனதும்தான். பிறகு  நண்பரகளுடன்  சிறிது  நேரம்  வியாயாடிவிட்டு வீட்டிற்கு  சென்றுவிடலாம்.

நடுநிலை பள்ளிகள்  (ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை) அதே  அதிகாலை தோரணங்கள், கோலங்கள், ஒலிபெருக்கியில் தேசபக்தி பாடல்கள்  என்பதெல்லாம்  மாறிவிட்டது  கொடி ஏற்றிவிட்டு ஐந்து பைசா மிட்டாய் (அதே மிட்டாய்தான் விலை ஏறிவிட்டது )  கைநிறைய  கொடுப்பார்கள் ஆனால் பத்தாது!!!. பிறகு சுதந்திர போராட்டத்தை பற்றியோ அல்லது போராடியவர்களை  பற்றியோ யாராவது பேசுவார்கள் அல்லது பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவை  நடைபெறும்  நானும்  இவற்றில்  பங்கேற்பதுண்டு  யாராவது  ஆசிரியர் எழுதி  கொடுத்ததை  மனப்பாடம்  செய்து  ஆவேசமாக  செய்கையுடன்  கையை நீட்டி பேசி  பரிசுகளும்  வாங்கியதுண்டு.  உண்மையில்  இப்போது  எந்த  தேசத்தலைவரின்  வாழ்கை  வரலாற்றை  பற்றியும்  ஞாபகம்  இல்லை  என்று  எண்ணி மிகவும் வருத்தமடைகிறேன்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தேசிய மாணவர் படை (NCC) இல் இருபதால் சற்றே நெஞ்சை நிமிர்த்தி வரிசையை ஒழுங்குபடுத்துவது,  சிறப்பு அணிவகுப்புகளில் கொடிக்கு வீர வணக்கம் செலுத்துவது, சாக்லேட் வழங்குவது  (இப்போதெல்லாம் மிட்டாய் போய்விட்டது)என்று  பொறுப்புகளுடன்  சென்றது. 

பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகள்  தொலைகாட்சி பெட்டி எங்கள் வீடிற்கு வந்த புதிது தூர்தர்சனில் ஒளிபரப்பாகும்  இந்திய  இராணுவத்தினரின்  அணிவகுப்பு மெய்சிளிர்க்கும் வண்ணம்  பார்த்து  ரசிப்பதோடு  முடிந்துவிடும்  (வேறு சேனல்கள் அப்போது எங்கள் ஊரில் கிடையாது)  பள்ளிக்கூடம் போகலையான்னு கேட்டுடாதீங்க இப்பெல்லாம் பள்ளி நாட்களிலேயே அப்பப்ப எட்டி பார்துட்டு சினிமாவுக்கோ அல்லது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கோ சென்றுவிடுவது வழக்கம்.

பாலிடெக்னிக் படிக்கும்போது சுதந்திர தினம் என்றால் ஒரு விடுமுறை அவ்வளவுதான். வேலைக்கு வந்த பிறகு ஆபிசில்   பார்வேர்ட்  இ-மெயில்  மட்டும்  இப்போது முதல் முறையாக ப்ளாக் வழியாக உங்களுடன்.   

நான் எழுதிருக்கும் ஒவ்வொரு பத்தியின் அளவையும் பார்த்தாலே எந்த அளவிற்கு சுதந்திர தின கொண்டாட்டங்கள் என்னளவில் குறைந்துவிட்டது என்பதை உணர்வீர்கள்.  இது எனக்கு மட்டும்தான் பொருந்துமா? எனது நாட்டுப்பற்று  இதைவைத்து  குறைந்துவிட்டது என்பதா? உண்மையில் உங்கள் மனசாட்சியை தொட்டு யோசித்து சொல்லுங்கள் சுதந்திர தினம்   என்றதும் உங்கள்  நினைவில் வேறு என்னவெல்லாம் தோன்றுகிறது?  என் கருத்து தவறா?  என்னுடன் பணிபுரியும் சிலரிடம் நேரடியாக இதுபற்றி கேட்டு அவர்களின் கருத்தை பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்த அளவிற்கு என் கருத்தை மாற்றுகிறார்கள் என்பதை!!!!!!!!  நீங்களும்  உங்கள்  எண்ணங்களை  கமென்ட்  பகுதியில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்   


அடுத்த சுத்திர தினத்திற்குள் கண்டிப்பாக யாரவது ஒரு தலைவரை  பற்றியாவது  படித்து  அவரை  பற்றி ஒரு பதிவாவது எழுதுவேன் என்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்.
பொடுசு
பெற்ற சுதந்திரத்தை சிறப்புடன் காப்பது நம் ஒவொருவரின் கடமை என்பதை உணர்ந்தவனாக.... மீண்டும் சுதந்திர தின வாழ்துக்களுடன்.... 

4 comments:

Abdulcader said...
This comment has been removed by the author.
Abdulcader said...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

நம் அனைவரின் எண்ணத்திலும் சுதந்திர தின

விழா என்றால் தேசிய கொடியும் மிட்டாயும்

தான் நினைவிற்கு வருகின்றது.கட்டுரையை

நல்லமுறையில் அமைத்துள்ளீர்கள்.அந்த மாறு

வேடப்போட்டியை மறந்துவிட்டீர்கள்

Unknown said...

இந்த சுதந்திர தின நாளில், பொடுசுவின்
இளமைகால சுதந்திர தின நாட்களையும்
கலந்து கொடுத்த பதிவு வரவேற்க தக்கது.
சுதந்திர தின வாழ்த்து அட்டை நான் ரொம்பவே ரசித்தது.
அதில் உள்ள வார்த்தைகளை எந்த ஒரு அந்நியனும்
படித்தால் நிஜமாகவே பிரமிப்படைவான்.
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

Unknown said...

Confidence come naturally with success but, success comes only to those who are confident.

Umasekhar.Ch.

Post a Comment

Related Posts with Thumbnails