Monday, September 6, 2010

நான் எங்கிருக்கிறேன்...!!!! - பாகம்-3


பாகம்-1 
பாகம்-2   ஒரு முறை படித்துவிட்டு தொடரவும்.

தொடர்பு எல்லையை விட்டு வெளியேறியவுடன் வேகத்தை இருமடங்கு அதிகமாக்கி பயணத்தை தொடர்ந்தனர், கிடைக்கும் தகவல்கள், படங்கள் போன்றவற்றை கவனமாக சேகரிக்க தொடங்கினர். இதுவரை யாராலும் நினைத்து கூட பார்க்கமுடியாத ஒரு பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கையில், சில மணி நேரங்களில் புதியதோர் சூரிய குடும்பத்தை சென்றடைகிறது ஸ்பேஸ் க்ருசியர் ++. Dr.பொட்ஸ் மற்றும் குழுவினர் தங்களது பயணம் வெற்றிபெறும் தருணம் நெருங்கிவிட்டதாக உணர்கின்றனர். உற்சாகமாக ஒவ்வொரு கிரகத்தையும் ஆராய தொடங்குகின்றனர்.  அப்போது அந்த அதிசயம் அவர்கள் முன்னே உள்ள திரையில் ஒளிர்கிறது . ஆம் சற்று முன் அவர்கள் கடந்து சென்ற ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தடயங்கள் தெரிகிறது. மகிழ்ச்சியில் யாருக்கும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, என்ன செய்வதென்றே புரியாமல் சில நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசைவற்று நின்றனர். சிறிது நேரம் கழித்து சுய நினைவு வந்தவர்களாய் பரபரப்பாக செயல்பட துவங்குகின்றனர்.
ஸ்பேஸ் க்ருசியர் ++ ஐ திசை திருப்பி அந்த கிரகத்தை நோக்கி விரைந்தனர். அக்கிரகத்தை நெருங்கிவுடன் வேகத்தை குறைத்து சீரான ஒரு வட்ட பாதையில் சுற்றி வந்து விவரங்களை சேகரிக்க தொடங்கினர். ஒன்றின் பின் ஒன்றாக பல ஆச்சிரியங்கள் அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. பூமியை போலவே  உயிர்கள் வாழ்வதற்க்கான சூழல் மட்டுமல்ல, இதுவரை எந்த வித சிறு பாதிப்பும்  இல்லாமல் முற்றிலும் புதியதாய் தோன்றிய பூமி போன்றே இருப்பது நம்ப முடியாத உண்மையாக அவர்களை  மெய் சிலிர்க்க வைத்தது. இங்கே பல வகையான உயிரினங்கள் மட்டுமல்ல நம்மை போல் மனித இனமே இருக்ககூடும் என்ற Dr.பொட்ஸ்ன் கருத்து குழுவினரது வெற்றி களிப்பை இருமடங்காக்கியது. மேலும் இந்த  கிரகத்தை  பற்றிய  விவரங்களை முழுமையாக சேகரிக்க ஸ்பேஸ் க்ருசியர் ++ ஐ அக்கிரகத்தில்  தரை இரக்க முடிவு  செய்கின்றார் Dr.பொட்ஸ்.  


இனி அந்த புதிய கிரகத்தில்......

இங்கும் அதே ஆங்கில பாடல்? எந்த கிரகத்திற்கு போனாலும் விடாமல் இந்த பாடல் எனக்கு மட்டும் கேட்டாலும்! இந்த முறை கேட்பதற்கு சற்று இதமாக இருந்தது ஆனால் நமக்கு பாடலை விட அங்கே என்ன நடக்கிறது என்பதுதானே முக்கியம்.....


தரை இறங்கியவுடன் அந்த கிரகத்தின் தட்ப வெப்ப சூழல், ஆக்ஸிஜன் மற்றும் ஒவ்வொரு வாயுக்களின் அளவு, என  பல  தேவையான விழயங்களை ஆராய்ந்ததில் நம் பூமி பல கோடி யுகங்களுக்கு   முன்பு இருந்தததை போலவே இருப்பதாக உறுதி செய்கின்றனர். மேலும்  அந்த கிரகத்திற்கு எங் எர்த் (இளம் பூமி) என்று  ஒரு பெயர் சூட்டுகின்றனர். ஸ்பேஸ் க்ருசியர் ++ ஐ விட்டு வெளியே பல மாதங்களுக்கு பிறகு வருகின்றனர். வழக்கமான விண்வெளி உடையை கழற்றிவிட்டு சாதாரணமாக  சென்று கல், மண், தாவரங்கள், பூச்சிகள் போன்ற  பல உயிர்களை எடுத்து சென்று பூமியில்  ஆராய்ச்சி  செய்வதற்காக சேகரிக்கின்றனர்.  சிறிது தூரம் கடந்து சென்று ஒரு ஆற்றங்கரையை அடைகின்றனர். இடிந்தும், மண்ணில் புதைந்து போனது  போல்  உள்ள  சிறு சிறு மனித உருவ சிலைகளை பார்த்து ஆச்சிரியமடிகின்றனர். Dr.பொட்ஸ் சொன்னது போல் மனிதர்கள் அந்த கிரகத்தில் வாழ்ந்து உறுதியாகிறது. மேலும் கிடைத்த சில ஆதாரங்களின் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆற்றில் ஏற்பட்ட மிகபெரிய வெள்ளத்தால் பலத்த  சேதம் ஏற்பட்டிருக்கலாம், பலர் இறந்திருக்கலாம், மண் சுவர்களால் ஆன வீடுகள் கரைந்து, புதைந்து  பேரழிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்களுக்கு தெரியவருகிறது. அப்போது அங்கே சில  மரத்தினால்  சிறு பெட்டிகள் கிடைக்கிறது.  இது நிச்சயம் இங்கே வசித்தவர்கள் போற்றி பாதுகாப்பாக வைத்திருந்த ஏதோ விலைமதிக்க  முடியாத  முக்கியமான பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பது அந்த பெட்டியை தயாரித்திருந்த விதத்திலேயே அவர்களுக்கு உணர்த்தியது.  அவற்றை திறக்க முயற்சித்து முடியாமல்  போனதால்  ஒரே   ஒரு  பெட்டியை மட்டும்  கையில் எடுத்துக்கொண்டு ஸ்பேஸ் க்ருசியர் ++ ஐ நோக்கி திரும்பினர்.
அனைவரும் மிகவும் களைப்படைந்து விட்டனர். சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் ஆராய்ச்சியை தொடரலாம் என்றும், எப்படியாவது  இன்னும்  ஓரிரு நாட்களுக்குள்   அங்கு வாழும் மனிதர்களை சந்திக்க  வேண்டும்,   மேலும் சில தகவல்களை உறுதி  செய்துவிட்டு பூமியை  நோக்கி பயணத்தை தொடர்வது என முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் ஸ்பேஸ் க்ருசியர் ++ ஐ நெருங்கிய  அவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது!!   ஆம் அந்த வழியாக சென்ற ஏதோ ஓர் மிக பெரிய உயிரினம்   ஸ்பேஸ் க்ருசியர் ++ ன்  வெளிப்புறத்தை பலத்த சேதப்படுத்தி இருந்தது. உள்ளே என்ன நிலை என்பதை  காண விரைகிறார் Dr.பொட்ஸ். உள்ளே  பெருமளவு  ஏதும் சேதாரம் இல்லை என்றாலும்,  மிகபெரிய   அதிர்வு காரணமாக ஆங்காங்கே சில முக்கியமான பாகங்கள் பாதிக்கபட்டுள்ளதால் இனி  காலம் தாமதிக்காமல்  உடனடியாக  புறப்பட்டு  தகவல்  தொடர்பு  எல்லையை சென்றடைந்து விட வேண்டும் என்ற  கட்டாயம்.  அவசர அவசரமாக ஒரு சில முக்கிய பழுதுகளை மட்டும் முடிந்த வரை சரி செய்து விட்டு பயணத்தை தொடங்கிவிட்டனர்.

இதோ தொடர்பு எல்லைக்குள் வந்தாகிவிட்டது,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனைத்து தகவல்களயும் ... கண்டு பிடித்த எங்  எர்த் (இளம் பூமி) அங்கு சென்றடைவதற்கான கணக்குகள், தூரம், அந்த கிரகத்தின் சிறப்பு, ஆதாரங்கள், புகைப்படங்கள் என ஒன்று விடாமல் கொடுத்தாகிவிட்டது. மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைந்து விட்டனர் Dr.பொட்ஸ் மற்றும் குழுவினர்.   Dr.பொட்ஸ்ஐ  சாதனை நாயகன் என்றும் ஏன் கடவுள் என்றெல்லாம்  கூட வர்ணிக்க  தொடங்கிவிட்டனர். Dr.பொட்ஸ் பூமியை வந்தடையும் நாளுக்காக  அனைவரும் காத்திருகின்றனர். சில மாதங்களுக்கு பிறகு  ஒரு நாள் Dr.பொட்ஸ்ன் ஆராய்ச்சி மையத்தில் வழியனுப்ப கூடிய கூட்டத்தை விட பலமடங்கு  மக்கள்  கூட்டம் கூடியது. ஆம் இன்னும் சில நிமிடங்களில் ஸ்பேஸ் க்ருசியர் ++  தரை இரங்க போகிறது!!! மக்கள் அனைவரும் ஆச்சிர்யதுடனும்,  ஆர்வத்துடனும் கண்களை இமைக்காமல் கூட பார்த்துகொண்டிருக்கும் வேளையில் தரையை  நெருங்குகிறது  ஸ்பேஸ் க்ருசியர் ++  தரையை  தொட்ட  அடுத்த  நொடியே   பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறுகிறது.   வெகு  தொலைவிற்கு தூக்கி  வீசபடுகிறார் Dr.பொட்ஸ், தலையில்  பலத்த  அடி  அரை மயக்கத்தில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்....

அப்போது மீண்டும் ஒலிக்கிறது அதே ஆங்கில பாடல் அனால் இந்த முறை எனக்கு மட்டும்மல்ல Dr.பொட்ஸ்க்கும் கேட்டிருக்க வேண்டும்.  பாடலை கேட்டு லேசாக அசைய முயற்சிக்கிறார் பாடல் கேட்கும் திசையை நோக்கி கைகளை துழாவுகிறார், கையில் ஏதோ ஒரு பெட்டி ஒன்று கிடைக்கறது,  இது  எங்  எர்த்தின்  ஆற்றங்கரையில் கிடைத்த பெட்டி நொறுங்கிய நிலையில் இதிலிருந்து அந்த பாடல் எப்படி கேட்கிறது  கையை  பெட்டியினுல் விட்டு ஏதோ ஒரு பொருளை  எடுக்கிறார். லேசாக தலையை தூக்கி அது என்வென்று பார்த்தால்...........

ங்கொய்யால..... அது என்னோட கைபேசி!!
அப்ப அடிக்கடி கேட்ட அந்த பாட்டு?
 என்னோட அலாரம் சத்தம்....
அப்ப மேல சொன்ன கதையெல்லாம்?
கனவு.....
அடடா ஆபீசிக்குலேட்டாயிடுச்சே! பரவால்ல......
ஆனா மெஸ் ஹால மூடிருப்பாங்களே......
"ஆஹா வடை போச்சே"  
    
ஆக இந்த கதை மூலமாக (உள் மூலமா? வெளி மூலமான்னு? கேட்காதீங்க) என்ன சொல்ல வரேன்னா அடிகடி அலாரம் பாடலை மாத்திகிட்டே  இருக்கணும்  இல்லன்னா அந்த பாட்டு  நமக்கு பழகிபோய்டும் மேலும். இதுமாதிரியான கனவோட சுகம்மா தூகம்தாங்க வரும். அப்பறம்  அலாரத்தால பலாரம் போன கதைகள்ன்னு  எதாவது என்ன மாதிரி பதிவு போட வேண்டியதுதான்.  


7 comments:

hari krishnan said...

நல்லவேளை கனவா போச்சு.......

Really கனவை நல்ல எழுத்தாற்றலால் நல்ல பதிவாக போட்டது பாராட்டதக்கது.

காயலாங்கடை காதர் said...

ட்ரிங்...........ட்ரிங்..........

ஹலோ...என்னா செந்தில் இன்னும்
ரெடியாகலையா?சரி சரி ஆபிசுக்கு
சரியான நேரத்திற்கு பொய்மட்டும் என்னா
செய்யாபோறோம்.
மெஸ்ஸிலிருந்து பிரெட் உங்களுக்கும் எடுத்திருகிறேன்.மெதுவாவே போகலாம்.

நல்ல நீ.....ளமான கனவு.வடை போனதுதான் வருத்தமா இருக்கு.

umasekhar said...

நண்பா,
காவேரி தண்ணீரும் பொண்ணுங்களோட கண்ணீரும் கிட்ட திட்ட ஒண்ணுதான் ,
வரும்போது கொஞ்சமாத்தான் வரும் ...,ஆனா பலப்ரச்ச்னைகளை கொண்டு வரும் .

இப்படிக்கு

Umasekhar.Ch.

பொடுசு said...

@hari krishnan
பாராட்டுக்கு நன்றி....

பொடுசு said...

@காயலாங்கடை காதர்
ஒரு நல்ல நட்பு பிரிந்து சென்ற வருத்தத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. மீண்டும் விரைவில் சந்திப்போம் அதுவரை பதிவுலகில் சிந்திப்போம்.

பொடுசு said...

@umasekhar
இது அனுபவ தத்துவமா?

வருகைக்கு நன்றி....

siva said...

nalla kanavutha apthulkalamuku oru copy podu santhosa paduvaru all the best

Post a Comment

Related Posts with Thumbnails