Saturday, October 2, 2010

கத்தார்-வில்லாஜ்ஜியோ

கடந்த இரண்டு (1) (2) பதிவுகளில் கத்தாரை பற்றி கொஞ்சம் அதிகமாகவே அலசிவிட்டேன் போல.. (ஏன் சாயம் போயிடுச்சா?) இருந்தாலும் விடுவதாய் இல்லை. 
அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில்  உள்ள பல பண்கடை கட்டிடங்களுக்கு (ஷாப்பிங் மால்)  சென்றிருக்கிறேன்....  பார்த்து வியந்தும் இருக்கிறேன். அனால் என்னை மிகவும் கவர்ந்த உண்மையில் ரசிக்கும் வகையில் கத்தாரில்  இருந்த ஒரு பண்கடை கட்டிடத்தை பற்றிதான் இந்த பதிவில் நான் எடுத்த சில புகைப்படங்களோடு என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்க உள்ள போலாமா..........
வில்லாஜ்ஜியோ - இதுதான் அந்த பண்கடை கட்டிடத்தின் பெயர். கட்டத்திற்கு வெளியே  காலை, மாலை, இரவு, பகல், வெயில், வியர்வை, காற்று என எந்த காலநிலை  வேண்டுமானலும்  இருக்கலாம்  ஆனால் உள்ளே வந்துவிட்டால் ஒரு இதமான குளிர், எப்போதும் மயக்கும் மாலை நேரம் போன்றதொரு ரம்மியமான வெளிச்சம். கட்டிடத்திற்கு உள்ளேதான் இருக்கிறோம்  என்ற  எண்ணம்  சிறிதும்  நமக்கு ஏற்படாதவாறு மேற்கூரையில்  வானம் போன்றே வர்ணம்  தீட்டப்பட்டிருப்பதே இந்த கட்டத்தின் மற்ற  விஷயங்கள்  சிறப்பாக  தெரிவதற்கு அடிப்படை  காரணமாக இருக்கும் என கருதுகிறேன். இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஐரோப்பிய மற்றும் இத்தாலிய கட்டிடக்கலையை   முன்மாதிரியாக கொண்டு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளில் உள்ள வீதிகளை போலவே மிகவும்  நேர்த்தியான  முறையில் அமைந்துள்ளது மேலும் அழகு.  
உள்ளே நுழையும் போதே புதிதாக ஒரு ஊருக்குள் செல்வது போன்று உணர்வும்  வீதிகளின் இருபுறமும் வீடுகள் இருப்பது போன்ற அமைப்பும் அனைவரையும் மேலே பார்த்துக்கொண்டே நடக்க வைக்கிறது.  (கிட்ட தட்ட பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல என்பார்களே அப்படிதான்)
வீதிகளின் நடுவே தார் சாலைகள் இருப்பது போல இங்கே அமைதியான  நீரோடை,  கட்டிடத்தின் அழகை  முழுமை அடைய  செய்கிறது  எனலாம். படகு சவாரி செய்து கொண்டே இந்த கட்டத்தின் அழகை ரசிக்க முடியும்.
உலகின் பிரபலமான தலைசிறந்த அனைத்து கடைகளும் இந்த ஒரே கட்டிடத்தில் பார்த்துவிடலாம் (நம்ம பட்ஜட்டுக்கு பார்க்க மட்டும்தாங்க முடியும்)
எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைக்கிறது என்பதை விட எல்லா நாட்டு மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து அவரவர் முறைப்படி உணவு உண்பதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சிதான். (நாங்க எப்பவுமே ஐஸ் கிரீம் மட்டும்தான்)
பனிக்கட்டி தளம் - சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) செய்யலாம் என்னை போல் தெரியாதவர்கள்  வேடிக்கை பார்க்கலாம்.   புதிதாக செல்வோருக்கு பயிற்சி    கொடுக்க பயிற்சியாளர்கள்  இருக்கின்றனர்.  
இரவு நேர வானத்தை வர்ணம் தீட்டியிருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஒவ்வொரு மைய பகுதியிலும் நாம் நின்று எவ்வளவு மெதுவாக பேசினாலும் அதன் எதிரொலி பலமுறை கேட்பது நம்மை பிரம்மிக்க செய்கிறது.


  • 13 திரைகள் உள்ளடக்கிய திரை அரங்கம்  3D வசதியுடன் கூடியது.  

  • 130000 சதுர மீட்டர் பரப்பளவில் 220 கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளன.

  • குழந்தைகளுக்காக  தனியாக பல விளையாட்டுக்களுடன் கூடிய பகுதி உள்ளது.
இப்படி வசதிகள் பல இருந்தாலும் இக்கட்டிடத்தின் உள்ளே நாம் எத்தனை முறை சென்றாலும் இதன் அழகு மற்ற விஷயங்களை கவனிக்க விடுவதில்லை என்பதே உண்மை.

இப்போ உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிதோ இல்லையோ கண்டிப்பா இந்த பண்கடை கட்டிடத்தை பிடிச்சிருக்கும்னு நினைக்கிறன். உங்கள் கருத்தை மறக்காம சொல்லிட்டு கீழே ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. மீண்டும்  இன்னொரு  இடத்தில பார்ப்போம். வர்ர்ர்ர்ர்ர்டா........ 

9 comments:

jothi said...

ம்ம்ம்ம்,.அருமை,.. ஏதும் அங்கே வாங்கலையா??

Abdulcader said...

செந்தில் உங்களுடைய இந்த பகிர்வுக்கு நன்றி. தங்கமணியிடம் வில்லோஜியோ பற்றி வர்ணிக்கும்
போது புகைப்படம் ஏன் எடுத்து வர வில்லை என்று வருத்தப்பட்டாங்க.அந்த வருத்தத்தை போக்க
நீங்க போட்டிருந்த இந்த புகைப்படங்கள் உதவியது.

அருமையான பகிர்வு.......

அரபுத்தமிழன் said...

Super, A1, Firs Class :)

Unknown said...

செந்தில்: (நாங்க எப்பவுமே ஐஸ் கிரீம் மட்டும்தான்)
ஹரி கிருஷ்ணன்: உங்கள போல பொறியாளரே ஐஸ் க்ரீம்னா? எங்கள போல ஆட்களோட நிலைமை!!!!!?? பார்வை ஒன்றே போதுமே தான்.
(அந்த பார்வை கூட பார்காதீங்கடானு பார்க்ல தொரத்தி விட்டானுங்களே அதபத்தி
எப்போ எழுதுவீங்க?!!!)

Unknown said...

மாலு மாலு மாலு
இது சூப்பரான மாலு
கூலு கூலு கூலு
இத பார்க்கும்போதே கூலு
தூளு தூளு தூளு
இந்த போட்டா எல்லாம் தூளு
கேளு கேளு கேளு
இந்த அண்ணன் பாட்ட கேளு
லூலு லூலு லூலு
நம்ம ரேஞ்ச் எப்பவும் லூலு.

பொடுசு said...

@jothi
விரலுக்கேத்த வீக்கத்ததானே தாங்க முடியும்

பொடுசு said...

@காயலாங்கடை காதர்
நான் இந்த பதிவை போட நீங்களும் ஒரு முக்கிய காரணம், அதனால நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நன்றி...

பொடுசு said...

@அரபுத்தமிழன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி. தொடர்ந்து வாங்க.....

பொடுசு said...

@hari krishnan
TR கட்சியில எப்ப சேர்ந்தீங்க? சொல்லவே இல்லை

Post a Comment

Related Posts with Thumbnails