Tuesday, October 19, 2010

தானத்தில் சிறந்தது....

நேற்று மாலை தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றிக்கொண்டே சென்றபோது ஏதோ ஒரு ஹிந்தி சேனலில் சற்று தானாக விரல் ஓய்வெடுக்க நின்றபோது ஒரு விளம்பரம் பார்த்தேன். இந்த பதிவை எழுதும் போது உண்மையில் அந்த விளம்பரத்தை பார்த்து நான்கு மணி நேரங்களுக்கு மேலாகிவிட்டது  ஆனால் அந்த விளம்பரத்தை இதுவரை நானூறு முறைக்கும் மேலாக மனதில் ஓடவிட்டுருப்பேன். இப்படி ஒரு தாக்கத்தை ஏதோ ஒரு புரியாத உணர்வை இதுவரை நான் பார்த்த பலநூறு சினிமாக்களுள் ஒன்று கூட ஏற்படுத்தியதாக தோன்றவில்லை. ஒரு முறை பார்த்தவுடனே மனதில் பதியும் அந்த சின்ன குழந்தையின் முகம், வெறும் 48 வினாடிகளுக்குள் ஒரு மிகப்பெரிய விஷயத்தை அனைவராலும்  எளிதில் புரிந்துகொள்ள கூடிய வகையில் அமைந்த உரையாடல் ஒரு நிமிடம் யாரையும் உணர்ச்சிவசப்படுதிவிடும்.


A better way of saying "get well soon"
Donate BLOOD
இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான இந்த விளம்பரத்தை எடுத்த இயக்குனர் மற்றும் குழுவினர்க்கு எத்துனை வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும். வாழ்த்துக்கள்.....

இதோ அந்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு. ஹிந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் சப்-டைட்டிலை பொறுமையாக படித்துக்கொள்ளவும்.

நன்றி youtube
நேரடியாக youtube ல் பார்க்க இங்கே கிளிக்கவும்

நானும் இரண்டு மூன்று முறை இரத்தம் கொடுத்திருக்கிறேன், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு எனது தாயாரின் இருதய அறுவைசிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மஞ்சள் காமாலை வந்திருந்ததால் இனி என் இரத்தத்தை யாருக்கும் பயன்படுத்த முடியாது என்று மருத்துவமனையில் அதிர்ச்சி செய்தி சொன்னார்கள். பிறகு எனது நண்பனின் ஏரியா கிரிகெட் டீமையே அழைத்து வந்து இரத்தம் கொடுத்து உதவினான்.  அவர்கள் அனைவர்க்கும்  இந்த பதிவை காணிக்கையாக்குகிறேன்.

இந்த பதிவால் யாரேனும் ஒருவர் இரத்த தானம் செய்தாரேயானால் அது எனது வாழ்நாள் சாதனையாகவே கருதுவேன்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் இனி வாழ் நாளில் இரதம் கொடுக்கவே முடியாதா??? விஷயம் தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்க.... 

4 comments:

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

பலமுறை முயன்றும் ரத்ததானம் செய்ய முடியவில்லை. தகுதி குறைவாம். சோகை.

ஆனால் மகள் வருடம் இரண்டுமுறை தானம் செய்கிறாள்.

பொடுசு said...

@துளசி கோபால்
வருகைக்கு நன்றி அப்படியே உங்க விக்கி பசங்க வாயிலாக என் இந்த பதிவின் கடைசியில் கேட்டிருந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன். ப்ளீஸ்.

அஹ‌மது இர்ஷாத் said...

ந‌ல்ல‌ ப‌திவு..

Abdulcader said...

எனக்கும் இரத்தம் கொடுக்க ஆசைதான், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இருந்தேன். உங்களின் இந்த பதிவை படித்தப்பின் அந்த வாய்ப்பை நாமே தேடிச்செல்லலாம் என்று முடிவு எடுத்துள்ளேன்.

Post a Comment

Related Posts with Thumbnails