என் முதல் வணக்கம்,
எப்பொழுதாவது ப்ளாக் படிக்க மட்டுமே நேரம் கிடச்ச எனக்கு இப்ப கொஞ்சம் எழுதுவதற்கும் நேரம் கிடைச்சதால யோசிக்காம உடனே கடைய திறந்தாச்சி இனி காசு கொடுத்தாவது கஸ்டமர மடக்கிபோடனும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்).
சரி என்ன, எப்படி, எதபத்தி, எவள்ளவு எழுதுறது ? (ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே). நாம ஏன் அத பத்தி யோசிக்கணும் என்ன வேணும்னாலும்,எப்படி வேணும்னாலும், எதபத்தி வேணும்னாலும், எவள்ளவு வேணும்னாலும் (என்னடா வேணும் உனக்கு) எழுதுவதர்க்காகதானே ப்ளாக் மத்ததெல்லாம் படிப்பவர்கள் ----------- (கோடு போட்ட இடத்துல என்ன எழுதனும்னு போக போக நீங்களே புரிந்துகொள்வீர்கள்).
"பொடுசு" என்னடா பேரு இதுன்னு எப்படியும் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் (செய்யட்டுமே) என் வீட்டிலும், உறவினர்களையும் கேட்டால் இப்பவும் கண்ணை அகல விரித்து பல கதைகள் சொல்வார்கள் எப்படிபட்ட கேரக்டர் அவன்னு. எங்கள் வீட்டு எல்லா விசேஷங்களிலும் எல்லாரும் ஒன்னா சேர்ந்தா கண்டிப்பா இந்த கேரக்டர பத்தி பேசாம இருக்கமடாங்க (பில்டப் போதுமா).
எல்லை கடந்த பிடிவாதம், எப்பவும் விளையாட்டு, ஏகப்பட்ட கற்பனைகள், கோபம், சண்டை என்று இருந்தாலும் கொஞ்சம் படிக்கவும் செய்வான். படிபடியாக பொடுசுக்குள் இருந்து இந்த செந்திலை வெளியே எடுக்க என் குடும்பத்தினர் மிகவும் சிரமபட்டார்கள் என்பதை நான் ஒப்புகொண்டேயாகவேண்டும்.ஆமாங்க என்னை சின்ன வயசுல எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. இப்ப எப்படின்னு கேட்குறிங்களா இப்ப 5' 7" உயரம் 78 கிலோ எடை யாரும் அப்படி கூப்பிட முடியது அனால் என் அண்ணன்கள், அக்காக்கள் என்னை இப்பவும் பொடுசுன்னுதான் கூப்பிடுவாங்க ஆசையாய் (பாசம் கண்ணை மறைப்பதால் அவர்களுக்கு நான் வளர்ந்ததே தெரியவில்லைபோல - நல்லதுதானே).
பொடுசுக்குலேயிருந்த செந்திலதானே வெளியே எடுத்தார்கள் அனால் செந்திலுக்குள் எப்பவும் பொடுசு இருந்துகொண்டேதானே இருக்கான். அப்பப்ப மட்டுமே எட்டிபார்துக்கொண்டிருந்தவன் இனி பதிவுகள் வழியாக உங்களுடன் எப்போதும் உங்கள் ஆசிர்வாதத்துடன் வெளியதாங்க இருப்பான். (என்னடா உள்ளே வெளியேன்னு மங்காத்தாவா ஆடுற).
கை பிடித்து அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிகையுடன்....
பொடுசு
