Monday, July 19, 2010

முதல் பதிவு

என் முதல் வணக்கம்,
எப்பொழுதாவது ப்ளாக் படிக்க மட்டுமே நேரம் கிடச்ச எனக்கு இப்ப கொஞ்சம் எழுதுவதற்கும் நேரம் கிடைச்சதால யோசிக்காம உடனே கடைய திறந்தாச்சி இனி காசு கொடுத்தாவது கஸ்டமர மடக்கிபோடனும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்).

சரி என்ன, எப்படி, எதபத்தி, எவள்ளவு எழுதுறது ? (ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே). நாம ஏன் அத பத்தி யோசிக்கணும் என்ன வேணும்னாலும்,எப்படி வேணும்னாலும், எதபத்தி வேணும்னாலும், எவள்ளவு வேணும்னாலும் (என்னடா வேணும் உனக்கு) எழுதுவதர்க்காகதானே  ப்ளாக் மத்ததெல்லாம் படிப்பவர்கள் ----------- (கோடு போட்ட இடத்துல என்ன எழுதனும்னு போக போக நீங்களே புரிந்துகொள்வீர்கள்).

"பொடுசு" என்னடா பேரு இதுன்னு எப்படியும் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் (செய்யட்டுமே)  என் வீட்டிலும்,  உறவினர்களையும்  கேட்டால்  இப்பவும் கண்ணை அகல விரித்து பல கதைகள் சொல்வார்கள் எப்படிபட்ட கேரக்டர்  அவன்னு. எங்கள் வீட்டு எல்லா விசேஷங்களிலும்  எல்லாரும்  ஒன்னா சேர்ந்தா கண்டிப்பா  இந்த  கேரக்டர  பத்தி பேசாம இருக்கமடாங்க (பில்டப் போதுமா).  

எல்லை கடந்த பிடிவாதம், எப்பவும் விளையாட்டு, ஏகப்பட்ட கற்பனைகள்,  கோபம், சண்டை என்று இருந்தாலும் கொஞ்சம் படிக்கவும் செய்வான். படிபடியாக  பொடுசுக்குள்  இருந்து இந்த செந்திலை  வெளியே  எடுக்க  என்  குடும்பத்தினர்  மிகவும்  சிரமபட்டார்கள்  என்பதை  நான்  ஒப்புகொண்டேயாகவேண்டும்.ஆமாங்க என்னை சின்ன வயசுல எல்லாரும் அப்படித்தான்  கூப்பிடுவாங்க. இப்ப  எப்படின்னு  கேட்குறிங்களா இப்ப 5' 7" உயரம் 78  கிலோ  எடை  யாரும்  அப்படி  கூப்பிட முடியது அனால் என் அண்ணன்கள், அக்காக்கள் என்னை இப்பவும் பொடுசுன்னுதான் கூப்பிடுவாங்க ஆசையாய் (பாசம் கண்ணை மறைப்பதால்  அவர்களுக்கு  நான் வளர்ந்ததே தெரியவில்லைபோல - நல்லதுதானே). 
     
பொடுசுக்குலேயிருந்த செந்திலதானே வெளியே எடுத்தார்கள் அனால் செந்திலுக்குள்  எப்பவும் பொடுசு இருந்துகொண்டேதானே  இருக்கான்.  அப்பப்ப  மட்டுமே  எட்டிபார்துக்கொண்டிருந்தவன் இனி  பதிவுகள்  வழியாக  உங்களுடன் எப்போதும் உங்கள் ஆசிர்வாதத்துடன் வெளியதாங்க  இருப்பான். (என்னடா உள்ளே வெளியேன்னு மங்காத்தாவா  ஆடுற).

கை பிடித்து அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிகையுடன்....

பொடுசு


  

9 comments:

Abdulcader said...

கலக்கிட்டீங்க செந்தில்.................வாழ்த்துக்கள்

அப்துல்

Anonymous said...

Excellent Podus! Nice to read!

As a bro who have seen u since birth and having a troves of ur antics, shall i make public here one after another or else u should publish here!

Saravana Kumar R
(one of the people who have christened "Podus")

Anonymous said...

Thambi

வாழ்த்துக்கள்

Ravi

Anonymous said...

வணக்கம்,

நான் செந்திலுடன் பழகிய நாட்களில், அவருக்குள் இளமை,வேகம்,நகைச்சுவை கலந்த பல நல்ல சிந்தனைகள், கருத்துக்கள் இருப்பதை உணர்ந்து இருக்கிறேன். செந்தில் அவர்கள் புதிதாக ப்ளாக் ஸ்பாட் ஆரம்பித்ததும் என்னிடமும் கூறினார். எனக்கு பொதுவாக
ப்ளாக்ஸ் படிக்கும் பழக்கமில்லை.(காரணம் வரும் நாட்களில்) இருபினும், அவர் ப்ளாக்சை திறந்து பார்த்தபோது பெயரே மிகவும் வித்யாசமாக வைக்க பட்டிருப்பதை உணர்ந்து mudhal பதிப்பை முழுவதும் படித்தேன். தன் முதல் பதிவை அருமையாக அழகாக கொண்டு வந்து இருக்கிறார்.

வாழ்த்துக்கள் செந்தில்குமார்.
வாழ்த்துக்கள் என்று ஒரு வார்த்தை சொல்லி தள்ளி நிற்க விரும்பவில்லை. எனக்கு தெரிந்த சில
பொடுசுகளை சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்.

''கடுகு சிறுத்தாலும் காரம் போகாது '' என்று
நம் பெரியவர்கள் கூறி இருகிறார்கள்.
(கடுகும் 'பொடுசு' தாங்க)
அதுபோல இந்த பகுதியிலும் பல காரசாரமான நல்ல
பல கருத்துக்கள், தகவல்கள், நகைச்சுவை சம்பவங்கள் வரும்
என்று நம்புகிறேன்.

ஒரு பெரிய தேர் என்று எடுத்துகொள்வோம்.
(தேரே பார்க்காதவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 'கர்ணன்' படத்தை டி வி டி யில் போட்டு பார்த்து கொள்ளவும்.)
அந்த தேருக்கு அத்தியாவசியமான ஒன்று 'அச்சாணி' .
அச்சாணி இல்லாமல் தேரை நகர்த்த மாட்டார்கள்.
(அந்த அச்சாணியும் 'பொடுசு' தாங்க.)

பத்திரிக்கையாளனின் 'பேனா முனை' ரொம்ப பொடுசுதாங்க. ஆனால், அதற்கு பயப்படாத அரசியல்வாதியும் உண்டோ இவ்வையகத்தில்.

ஆட்டோ ஒட்டின எனக்கே அணுவை பத்தி தெரிந்திருக்கும் போது , இந்த ப்ளாக்சை படிக்கற உங்களுக்கா தெரியாது!!? அந்த அணுவும் 'பொடுசு'தாங்க.
ஆனால் அது செய்ற வேலை தான் ரொம்ப 'பெருசு'.

இவ்வளவு சொன்ன நான், என் field -ல ஒரு 'பொடுச' பத்தி சொல்லாம போன எப்படி?
மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, etc ...
உதாரணத்துக்கு ஒரு கார் எடுத்துக் கொள்வோம். அதன் முழு எடையையும் (அதனுள் அமரும் பயணிகள் எடையும் சேர்த்து), அந்தக் காரின் ஒரு பொருள் தான் தாங்கி இருக்கிறது. அது எந்த பொருள் தெரியுமா?
நிறைய பேர் டயர் ,வீல் என்று நினைத்து இருப்பீர்கள். அது தவறு.
'airpin '. அதுதான் இங்கே முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவும் 'பொடுசு'தாங்க.

இப்படி உலகத்துல நிறைய 'பொடுசுங்க' சத்தமின்றி பல சாதனைகள், மற்றும் நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கும்போது நம்ம 'பொடுசு' ஒண்ணும் மொக்கை இல்லீங்க......

மீண்டும் வாழ்த்துக்கள் கூறி, வரும் நாட்களில் நல்ல பதிவுகளுக்காக காத்திருக்கும்....
உங்கள்,
ஹரி.

Unknown said...

Indha comment pona maasam 21aam thedhi yezhudhiyadhu. ippa dhan velila varudhu.
late aa vandhaalum latesta vandhu iruku illa???

பொடுசு said...

அப்துல்

வருகைக்கு நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்கிறேன்.

நன்றி அண்ணா,

உங்கள் கமெண்ட்ஸ் படிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

பொடுசை பத்தி என்னைவிட உங்களுக்குதான் நல்ல தெரியும் அதனால பொடுசு மானம் கப்பலேராம இருக்குனும்னா நானே சொல்லிடுறேன்.


ரவி,
வருகைக்கு நன்றி,அடிக்கடி வந்து போங்க.

ஹரி,
மிக்க நன்றி, ஆனா கமண்ட்ஸ் போடர இடத்துல ஒரு பதிவே போட்டுட்டீங்க இப்பதாங்க ஆரம்பிச்சிருக்கேன் இவலோல்லாம் தாங்கமாட்டான் பொடுசு. உண்மைலேயே லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருந்துது.

Unknown said...

Hai ethavathu bommainga podungappa,
thamil padikka theriya tha naangalla ennapanrathu.

Umasekhar.Ch

raj said...

பொடிசுக்கு
என்னத சொல்லுறது, எனக்கு 30 வருஷம் பின்னாடி போனாப்பில இருந்தது. நீ ஆரம்பிச்சிட்ட, என்னால மறக்கமுடியல. ஆத்துல குளிச்சு ஈர டவ்சர்ல குச்சியாலா அம்மாகிட அடி வாங்கியது, பள்ளிகுடம் போதாக சொல்லி விட்டு தென்னை தோப்பில திருடன் போலீஸ் விளையாண்டது.. ஆத்துல கபாடி விளையாண்டது ........... என்னனமோ போ, வயசான ஆனுபவம் வரணும் என்று சொல்லுறாங்க, ஆனா எனக்கு அனுபவத்தைவிட பாலிய காலமே சந்தோசமா, சிறந்ததா உள்ளது.
ஆற்றமையுடன்..............
அந்தோணி

Unknown said...

Ellaa vasagargalukkum ennudaya independance day vazhthukkal.

senthil,

Ungaludaya katturai padithen,nanraga irunthathu.

Umasekhar.Ch.

Post a Comment

Related Posts with Thumbnails