Tuesday, September 7, 2010

ரஜினி ரசிகர்கள் மட்டும்தானா? மற்ற ரசிகர்கள்?

இந்த வாரம் தமிழகதின் அல்லது  தமிழ்  நாள்/வார/மாத  இதழ்களின் முக்கிய செய்தி ரஜினியின் மகள் திருமண விழா,  அதற்கு  ரஜினி  தனது ரசிகர்களை அழைக்கவில்லை இருந்தும் சென்றவர்களை  உள்ளே அனுமதிக்கவில்லை,  இதனால் வெகுண்டெழுந்த ரசிகர்களின்  புலம்பல்கள், கடிதங்கள், எதிர்ப்பு வாசகங்கள், கண்ணீர் கதைகள் போதாத குறைக்கு ஏகப்பட்ட ஈமெயில் வேறு (எனக்கு ஒரே நாளில் பத்து பேரிடம் இருந்து).  இதெல்லாம் படிச்சப்பதாங்க  மல்லாக்க  படுத்துகிட்டு  எச்சில் துப்புவதுன்னா என்னான்னு புரிஞ்சிது.  இந்த கடுப்புதாங்க செந்திலா இருந்த என்னை இப்படி கவுண்டமணி போல் ஒரு பதிவு போட தூண்டியது.

என்னடா விளம்பரம்! இந்த சினிமாகாரங்கதான் தனக்கு தானே போஸ்டர் அடிக்கிறது கட்-அவுட் வக்கிறதுன்னு செவுத்த நார அடிக்கிறானுங்க...  அட எதுவுமே கிடைக்கலேன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க... ஆன 35 வயசுக்கு மேல போகமட்டேன்கிரானுங்க....   ஏன் ஒலகத்துல இவனுங்க மட்டுந்தான் பொறந்தனுன்களா? நாமெல்லாம் வேஸ்ட்டா? 
இப்புடி வெகுளிதனமா/முட்டாள்தனமா  இன்னும் ஆட்கள் இருகிறார்களா என்ன? இல்லை ஊடகங்கள் மிகைபடுத்துகின்றனவா? உண்மை தெரியவில்லை! அப்படி அதில்  ஐம்பது சதவீதம் உண்மை இருந்தாலும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.   இவங்கள பத்தி சுருக்கமா சொல்லனும்னா,  வேலி ஓரமா போனா முள் குத்தும்னு தெரிஞ்சும் அங்க போயி முள்ள அவங்களே மிதிசிட்டு, முள்ளு குத்திடுச்சின்னு முள்ளு மேல பழி போடும் கூட்டம். சாதாரணமா சொந்தக்காரன் நேரா வந்து (ஏன் காந்தியா வரகூடதா) பத்திரிக்கை வச்சாலும் அதுல பாக்கு பணம் ஒத்த ரூபா வைக்கலைன்னு கல்யாணத்துக்கே  போகமட்டங்க, இவளவு ஏன் தன்னோட  மகளோ, மகனோ வேற சாதி, மதம்னு எதாவது மாத்தி காதல் கலயாணம் பண்ணா  கூட போகமட்டங்க. ஆனா தன்னோட குடும்பத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒரு மூன்றாவது மனிதன் இல்ல இல்ல முப்பதாவது மனிதன் என்று கூட சொல்ல முடியாத ஒரு நடிகனின்  படத்தை  முதல் நாளோ,தொடர்ந்து பல நாட்களாக வெறித்தனமாய்  பார்பதாலோ, கட் அவுட் வைப்பதாலோ,  பாலபிஷேகம் செய்வதாலோ தான்தான் மிக சிறந்த  ரசிகன்  என்று தனக்கு தானே  ஆஸ்கார்  விருது கொடுத்துக்கொள்ளும்  ஒரு ரசிகனிடம் என்னோட ஒரே   கேள்வி  இதுதாங்க, உண்மையிலேயே அந்த நடிகன் மற்றும் அவன் குடும்பம் நன்றாக  வாழவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் இதெல்லாம்  செய்தேன் என்று  நெஞ்சில்  கைவைத்து  சொல்லுங்கள் பார்காலம்?

கண்ணா! கீழ விழுந்தா இதே பால நாளைக்கு உனக்கு ஊத்துவாங்க, வ்வ்வர்ர்டா... 
சில படங்களை முதல்  நாள் முதல் காட்சியை பார்த்த  அனுபவத்தில் சொல்கிறேன் ஒருக்காலும் அப்படி  இருக்க  வாய்ப்பில்லை. ரசிகர்  மன்றகளுக்கு  நடிகர்கலாலோ  அல்லது வேறு எப்படியோ வரும் பணத்திற்காக  இருக்கலாம் ,   நண்பர்களுடன்  அல்லது  ஏரியா கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டு கும்மாளம் அடிக்கவும், பொது மக்களுக்கு  இடையூறு செய்வதும், குடித்துவிட்டு  ரகளை  செய்வதுமாய் சுற்றி  இருப்பவர்களிடம்  மலிவு விளம்பரம் செய்யவும்தான் ரசிகன் என்ற போர்வையை போர்த்திக்கொள்கிரார்கள்.காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதால் மட்டுமே அந்த நடிகனுக்கு மாமனகவோ,  மச்சானாகவோ அல்லது  சொந்தகாரனாகவோ  ஆயிட்டதா நெனச்சிகிட்டு  அவங்க  வீட்டுல  நடக்குற கல்யாணத்துக்கு  கூப்பிடல, காதுகுத்துக்கு கூப்பிடல, மஞ்சள்  நீராட்டு  விழாவுக்கு  குச்சி கட்ட கூப்பிடலன்னு  மனசு ஒடிஞ்சு, வாழ்க்கையே வெறுத்து, நொந்து நூலாயி தற்கொலை ரேஞ்சிக்கு யோசிச்சின்னா... உங்கள திருத்த ஒரு ரஜினி இல்ல ஒரு கோடி ரஜினி வந்தாலும் முடியாது.
பேசாம ஒவ்வொரு புதுப்படம் ரிலீஸ் ஆகுற நாட்களையும்  அரசாங்க விடுமுறை தினமாக்கிடலாம்.
யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படிதான் எங்களை நாங்களே நொந்து மனசு  ஒடிஞ்சு இந்த  மாதிரில்லாம்  புலம்புவதான்  எங்கள்  ரசிகர் மன்றங்களின்  நோக்கம்  என்பவர்களுக்கு மேலும் நீங்கள் எததெர்கெல்லாம் உங்களை நொந்து இன்புறலாம்  என்பதற்கு என்னால் ஆன சில டிப்ஸ்.....
கமலஹாசனின் இதிஹாச ரசிகர்கள்,
மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவிற்கு தங்களை அழைக்கவில்லை என்று வெகுண்டெழுந்து எலிசபெத் ராணியை எதிர்த்து போர் தொடுக்கலாம்.
விஜயகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள்,
கூட்டணி அமைக்க தங்களை அழைக்கவில்லை என நொந்துகொள்ளலாம்.
விஜய்யின் நோயாளிகள் சாரி ரசிகர்கள்,
டாக்டர் பட்டம் வாங்கியும் தங்களுக்கு வைத்தியம் பார்க்க அழைக்கவில்லை என்று மனமுடைந்து விச ஊசி போட்டுக்கொள்ளலாம்.
அஜித்தின் அதிவேக  ரசிகர்கள்,
 F1  கார் பந்தயத்திற்கு தங்களை அழைக்கவில்லை என நொந்து 'தலை'யில் அடித்துக்கொள்ளலாம்.
தமிழக அரசின்  இலவச தொலைகாட்சியில் கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகும் படங்களை மட்டுமே பார்க்கும் ரசிகர்கள்,
கலைஞர் குடும்பத்தினரின்  படங்களுக்கு இலவச டிக்கெட் தந்து அழைக்கவில்லை என நொந்து தங்களுக்கு தானே கடிதம் அல்லது தந்தி அனுப்பிக்கொள்ளலாம். (சன் சேனல் ரசிகபெருமக்களும் இது பொருந்தும்).

MGR - ஜெயலலிதா நடித்த படங்களை மட்டுமே இன்னுமும் பார்த்துகொண்டிருக்கும் புரட்சி ரசிகர்கள்,
தேர்தலில் MLA சீட் கொடுக்கவில்லை என்று கொலைவெறி கொண்டு கொடைநாட்டில் போய் தற்கொலை செய்துகொள்ளலாம்.
மேலும் என்னோட ஃபேவரட்.......

கிங் பிஷர்  பியர் மட்டுமே குடிக்கும் குடிமகன்ங்கள் ஹி ஹி ரசிகர்கள், 
 தனது விமானத்தில் இலவசமாக அழைத்து செல்லாத மல்லையவை நொந்து கொள்ளலாம், மேலும் அவருக்கு போட்டியாக கள்ள சாராயம் காய்ச்சி நஷ்ட்டம் ஏற்படுத்தலாம்.  

இது போல உங்களுக்கும் தெரிந்த வழிகளை கமெண்ட்ஸ் பகுதியில் கொடுக்கவும் இன்னும் பல ரசிகர்கள் பயன்பெறுவார்கள்.

10 comments:

ravikumar said...

Good to read and laugh due to last quotes

Anonymous said...

ethu unmayva nalla erukuthuu, entha idea enaku en thonala

DR.K.S.BALASUBRAMANIAN said...

என்னமா எழுதியிருக்கீங்க....! ரசிகன்னு சொல்றவங்கல்லாம் நாண்டுக்கிட்டு நின்னு சாகலாம்.

Unknown said...

நான் என்னத்தை சொல்ல...........

நடிகன் அவன் தொழிலை செய்றான். நல்லா நடிச்சிருந்தா ரசிப்பதில் தவறில்லை. அத்தோடு நிப்பாடிகனும்.
எனக்கு தெரிந்து வயசுக்கோளாறு தான் அதிகம்.

பொடுசு said...

@ravikumar
welcom and thanks....

பொடுசு said...

@Anonymous
வருகைக்கு நன்றி....

login செய்தோ அல்லது Follow ல் பதிந்தோ பின்னூட்டம் இடவும், இல்லையேல் யாரென்று தெரியாது.

பொடுசு said...

@drbalas
முதன் முதலாக ஒரு மருத்துவரின் வருகை.... ஆஹா மிக்க நன்றி...மிக்க மகிழ்ச்சி...

நாண்டுகிட்டு சாகரதெல்லாம் வேண்டாம். ரசிகன் என்பதன் சரியான அர்த்தம் மற்றும் அதன் எல்லை என்னவென்று உணர்ந்தாலே போதும்.

பொடுசு said...

@hari krishnan
நீங்க சொல்லறதும் சரிதான்.... ஆனா கோளாறு எல்லா வயசிலையும் வருதுங்கரதுதானே இப்ப பிரச்சனை.

Abdulcader said...

"நடிகர்கள் என்னும் கூத்தாடிகளும்,
ரசிகர்கள் என்னும் முட்டாள்கள்"

அருமையான படைப்பு,
வாழ்க உம் புகழ்,வளர்க உம் வலை.

மானாட மயிலாட புகழ் கலா அக்காவின் ரசிகர்களே.
அக்கா கூட ஆட கூப்பிடவில்லை என்று காண்டாகி.நமீதா பேசும் தமிழை நாலு நாளைக்கு கேட்டு விட்டு துக்கில் தொங்கலாம்.

Prathap Kumar S. said...

hahaha...Good one

Post a Comment

Related Posts with Thumbnails