Thursday, September 16, 2010

கத்தார் - ஒரு அலசல்....1

கத்தார் வந்து மூன்று வருடங்கள் நெருங்கிவிட்டது. கத்தார் என்றவுடன் எனக்கு மட்டுமல்ல பொதுவாக (வெளி நாட்டில் வேலை செய்கிறேன்  என்ற  பேரில்)  இங்கு வேலை செய்யும் என்போன்றவர்களுக்கு என்னென்ன விஷயங்கள்  நினைவிற்கு வரும்   என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.









கத்தார் நம் தமிழகத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தையும்  ஒரு  சில சிறு கிராமங்களையும் சேர்தாற்போல இருக்கும் ஒரு குட்டி நாடு. வெறும் பதினேழு இலட்சத்தை நெருங்கிகொண்டிருக்கும் மக்கள் தொகை இதில்  40 சதவீதத்திற்கும் அதிகமாக இந்தியர்கள் (என்னையும் சேர்த்து) வாழும்  இல்லை இல்லை வேலை செய்யும்  ஒரு நாடு.  மேலும்  உலகின் ஏறத்தாழ அனைத்து  நாடுகளை  சேர்ந்த மக்களும், 20 சதவீகிதம் உள்நாட்டு மக்களும் இந்த மக்கள் தொகையில்  அடங்குவர்.

1940 களுக்கு முன்பு வரை  ஏழை  நாடுகளின் பட்டியலில் இருந்த  கத்தார்  தற்போது உலக பணக்கார நாடுகளின் வரிசையில் இரண்டாம்    இடத்திற்கு  அதிவேகமாக முன்னேறிவிட்டது!!!!.  இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஆம் இயற்கை இந்நாட்டிற்கு  அளித்த பரிசுதான்.....  கடல் என்ற அற்புத விளக்குக்குள்  அடைபட்டு கிடக்கும்  இயற்கை வாயு  மற்றும் எண்ணை வளம் என்ற பூதம். இன்று எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டிபடைப்பது இந்த பூதம்தான். பிறகென்ன அற்புத விளக்குதான் கையில்  கிடைத்துவிட்டதே  எடுத்து தேய்த்தால் பூதம் வரும் (அதாங்க இயற்கை வாயு  மற்றும் எண்ணை) வித்தா காசு வரும். ஆனால் அது அத்தனை சுலபமான காரியம் இல்லை. மேலோட்டமாக உங்களுக்காக......
Offshore Oil Plotform
Offshore Gas Platform

நம்ம ஊர்ல எண்ணை  கிணறுன்னா  ஏதோ  வீட்டு  பின்புறத்தில்  இருக்கும் தண்ணீர் கிணறு போல இருக்கும்னு   இப்பவும் பாதி பேர்க்கும் மேல கற்பனை செய்துகொண்டிருகிறார்கள். மேலே உள்ள படத்தில் இருக்கும் பணி மேடைகள்தான் கடலுக்கு அடியில் பூமியின் அடுக்குகளுக்கு இடையே  நமக்கு தேவையான, தேவையற்ற,  பல வாயுக்களுடன்  கலந்து  இருக்கும் இயற்கை வாயுவையோ  அல்லது கச்சா எண்ணெயையோ  வெளியில் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கரையில்  இருக்கும் பணி தளங்களுக்கு குழாய்கள் மூலமாக  எடுத்து சென்று பல்வேறு   சுத்திகரிப்பு மற்றும் பல மாற்றங்களுக்கு  உட்படுத்தி நீர்மமாக்கபட்ட இயற்கை வாயு (LNG) , LPG , பெட்ரோல், டீசல்  அல்லது கச்சா எண்ணையாகவோ பெரிய  பெரிய தொட்டிகளில் (storage tank) நிரப்புகின்றனர். கீழே உள்ள படங்களை பார்க்கவும். 








இந்த சைட்லதாங்க நான் மூன்று வருடமாக.... ம்கும் என்னத்த சொல்ல.
கொஞ்சம் நான் எடுத்த படங்களையும் பாருங்க...
One of the LNG sorage tank. Capacity : 140,000 m3
 இந்த தொட்டிகளிளிருந்து  பிரத்தியேகமான  கப்பல்கள்  மூலம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இப்படி.
இந்த படங்களை பார்க்கும் போதே ஓரளவிற்கு இது எத்தனை கடினமான காரியம் என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். (இதைதான்  சும்மா வருவாளா சுகுமாரி தெரிஞ்சுகோடா சோமாறின்னு சொல்லுவாங்க). இதெல்லாம் எப்படி  சாத்தியமாகிறது என்று யோசித்தால் அதற்கு தெளிவான ஒரு பதில்.... இயற்கை  சக்தியை  மிக லாவகமாக கையாள தெரிந்த மனித சக்திதான். ஆம் அதற்காகத்தானே உலகின் அனைத்து  நாட்டை சேர்ந்த உழைப்பாளிகளும் இங்கு ஒன்று  கூடி  இருக்கின்றனர்.பல லட்சம் பேர்களின் உழைப்பு, பல ஆயிரம் பேர்களின் ரத்தம், பல நூறு பேர்களின் உயிர் இதுவே கத்தாரின் இந்த வளர்ச்சிக்கு முதல் படி என கூறினால் அது மிகையல்ல.     பொதுவாக ஒரு நாட்டின் ஒரு சில இடங்களில் கட்டுமானபணிகள் நடக்கும் ஆனால் இங்கு எண்ணை மற்றும்  இயற்கை வாயு உற்பத்தி/ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த பணி தளங்களுக்கு (site) நடுவேதான் இந்த நாடே அமைந்திருக்கிறது.  உலகிலேயே அதிக இயற்கை  வாயு  கிடைக்கும்  நாடுகளின் தரவரிசை பட்டியலில் கத்தார் மூன்றாம் இடத்திலும் எண்ணை வளத்தில் பதிமூன்றாம் இடத்திலும் இருக்கிறது.(கவனிக்க: எண்ணை வளத்தில் மட்டும் இந்தியா இருபதாம் இடத்தில்  இருக்கிறது. அப்டியா!!!!!!!).
ஒரு முறை இந்நாடிற்கு வேலைக்கு வந்துவிட்டால் போதும் சுற்றி சுற்றி எங்காவது வேலை வாய்ப்பு கிடைத்து  கொண்டே  இருக்கும்,  நாமே  போதும்  என்று  ஊருக்கு போனால்தான் உண்டு.  ஆனால் இதில் இருக்கும் ஒரு சில பிரச்சனைகள் என்னவென்றால்? முதலில் தட்ப வெப்பநிலை, சர்வ சாதாரணமாக 50oC வெப்பம் கூடவே காற்றின் ஈரப்பதம் என சொல்லகூடிய ஹுமிடிட்டி (humidity) 70%முதல் 80% வரை சேர்ந்து தாக்கும். அதாவது வெளியில் எந்த வேலையும்  செய்யமால்  அப்படியே இரண்டு மூன்று நிமிடங்கள் நின்றாலே மொத்த உடம்பும்,உடையும் வியர்வையில்  நனைந்தே போய்விடும். சில நிமிடங்களில் நம் உடம்பில் உள்ள மொத்த தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிடும் எப்போது வேண்டுமானாலும் மயங்கி விழுந்துவிடும் நிலைக்கு தள்ளப்படுவோம். அதோடு முடிந்து விட்டதா? இல்லை!! மணல் காற்று  அதிகமாக வீசும்  காலங்களில் இன்னும் கொடுமை கண், காது, மூக்கு, வாய் என எல்லா வழியகவும் பொடி மண்ணை உள்ளே வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு குளிர் இதிலும்  எந்தவித குறையும் இல்லாமல் 7oC க்கும்  குறைவாக  அதுவும்  நம்மை படுத்திவைக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்கள் மேற்சொன்ன எந்த பிரச்சனயும் இல்லாமல் ஓட்டிவிடலாம். இயற்கை படுத்தும் பாடு  ஒருபுறம்  இருக்க  நாம்  பணி புரியும் இடத்தின்  தன்மைகேற்ப, பலதரப்பட்ட வாயுக்கள், கெமிக்கல், ஆசிட் போன்றவற்றை சுவாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் பல பக்கவிளைவுகளின் தாக்கம்   பக்காவாக பிற்காலங்களில் தெரியும். இவ்வளவு  பிரச்னைகள்  இருந்தும் நானும், நம் நாட்டவரும், மற்ற நாடுகளை சேர்ந்த  குறிப்பாக சொகுசானவர்கள் என நாம் கருதும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கே ஓடி வருவது ஏன்???????????

அடுத்த பதிவில் பார்ப்போம்........கத்தார் -  ஒரு அலசல்....2

குறிப்பு: உங்களுக்கு பிடிச்ச மாதிரி எழுதனும்னு  ஆரம்பித்தேன் முடியாம   உங்களுக்கு புரியற மாதிரியாவது  எழுதுனும்னு போய்கிட்டே இருக்கேன் எப்படி இருக்குனு சொன்னா மேற்கொண்டு தொடர்வதர்ற்கு வசதியாக இருக்கும்   

22 comments:

ராஜ்குமார் said...

நானும் கத்தார்ல ஒரு 5 ஆண்டு வேலை பார்தேன்.உண்மைய சொல்லி இருக்கிக. அதுவும் வெள்ளி கிழமை தோசை கடைல தோசை திங்க காத்து இருந்து சாப்பிட்டது-மறக்கவே முடியாது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா எழுதியிருக்கீங்க, தொடர்ந்து எழுதுங்க!

jothi said...

நண்பரே UV radiation உலகிலேயே இங்கேதான் அதிகம். Good sharing,..

jothi said...

//

ராஜ்குமார் said...
வெள்ளி கிழமை தோசை கடைல தோசை திங்க காத்து இருந்து சாப்பிட்டது,..//

உண்மைதான்,..நான் கூட கம்பேனில வேலை பாக்குறதுக்கு பதிலா பேசாம இது மாதிரி தோசை கடை வச்சிராலாமுன்னு தோணியதென்னவோ உண்மை,.. (தோசை கடை வைக்கிறதுக்காக பாரின் போகணுமான்னு ஊர்ல கேப்பாங்கன்னு வுட்டுடேன்)

ranhasan said...

kaththaara nerla parka mudiyaatalum intha photoesla romba alaga parka mudinjathu, romba nandringa, thodarnthu ithu madiri nalla thagavalai kudunga...

Anonymous said...

Good thought...go ahead

பொடுசு said...

@ராஜ்குமார்

ஐயோ, வெள்ளி கிழமை சாப்பாடுக்காக கொரங்கு பல்டி அடிக்காததுதான் மிச்சம் அத பத்தி அடுத்த பாகத்துல சொல்றேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக நன்றி. தொடர்ந்து வாங்க.....

பொடுசு said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி. தொடர்ந்து வாங்க.....

பொடுசு said...

@jothi
நல்ல தகவல், மேலும் விவரங்களை சேகரிக்க தூண்டுகிறது. நன்றிகள் பல...தொடர்ந்து வாங்க.....

பொடுசு said...

@ranhasan
கண்டிப்பா மிக விரைவில் கத்தாரை நேரில் பார்ப்பீர்கள், அதற்கு முதலில் வாழ்த்துக்கள். (யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்) மேலும் உங்களை போன்றோரின் அதரவு என்னை மேலும் உற்சாகமடைய செய்கிறது. மிக்க நன்றி.....

பொடுசு said...

@Anonymous

thanks, please add your name......

Prathap Kumar S. said...

ஆச்சர்யமான புதிய தகவல்கள். நீங்க சொன்ன வெயில் தாக்கம் மட்டும் எனக்குப் பழசு. நான் அமீரகத்தில் இருக்கிறேன்.

இப்படியே தொடருங்கள். இது புரியறமாதிரி இருக்கு...எனக்கே புரியதுன்னா எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன்...:)

Unknown said...

நல்லா பதிப்பு. மிக அழகான மக்கள் அதிகம் பேர் பார்த்திடாத புகைப்படங்கள். தொடரட்டும்..... வாழ்த்துக்கள். (அல்-கோர் தாத்தா கடைய பத்தியும் எழுதுங்க.)

Unknown said...

Very Good senthil,

Qatar boidata we got. nice pictures and nice Qatar story.

I am really appriciate you.

Umasekhar.Ch.

பொடுசு said...

@umasekhar

Thanks for appreciation, please visit and pose your valuable comments regularly.

பொடுசு said...

@நாஞ்சில் பிரதாப்

நன்றிகள் பல. நிச்சயம் மேலும் பல தகவல்களுடன் அடுத்த பாகம் விரைவில்...

தொடர்ந்து வாங்க....

பொடுசு said...

@hari krishnan

நன்றி ஹரி, உங்க கேமரா கொஞ்சம் கடன் கொடுத்தீங்கன்னா இன்னும் பல புகைப்படங்களை போடறேன்....

Abdulcader said...

நல்லாவே அலசுறீங்க!!! flare கொழுந்தவிட்டு எரிகிற புகைப்படமும் போட்டு மக்களை பீதியாக்கியிருக்கலாம்.....

அடுத்த பாகத்திற்காக ப்ளாக் மீது விழி வைத்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.

பொடுசு said...

@காயலாங்கடை காதர்

நன்றி, அடுத்த பாகம் மிக விரைவில் நீங்கள் கேட்ட புகைப்படத்துடன்.

எம் அப்துல் காதர் said...

// இப்படியே தொடருங்கள். இது புரியறமாதிரி இருக்கு...எனக்கே புரியதுன்னா எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன்...:)//

உண்மைய எப்படி எங்க வேணும்னாலும் சொல்லலாம் பாஸ் ஹி..ஹி..

RAJA (செ. இராசமாணிக்கம்) said...

now Qatar is the first richest country in the world.

பொடுசு said...

@RAJA
welcome,
thanks Mr.Raja for good sharing.

Post a Comment

Related Posts with Thumbnails