Sunday, August 22, 2010

நான் எங்கிருக்கிறேன்...!!!! - பாகம்-1


தூரத்தில் ஒரு பாடல் கேட்கிறது, எதோ ஒரு ஆங்கில பாடலாக இருக்கலாம் சரியாக காதில் விழவில்லை ஆனால் இது எனக்கு மிகவும் பரிட்சயமான இசை ...................,       சுமார் எத்தனை நூற்றாண்டுகள் கடந்துசென்றிருக்கலாம் என்று நினைவில்லை நான்காம் உலகப்போர் முடிந்து பல நூறு  ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பயன்படுத்தப்பட்ட  அணு ஆயுதங்களின்  தாக்கத்தால் இன்னமும் உயிர்  பலிகளின் எண்ணிக்கை  ஒருபுறம் தொடர்ந்து   அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, நவீனத்துவத்தின் பயனாக ஓசோன் படலத்தை ஓய்வெடுக்க செய்தாகிவிட்டது,  புவி வெப்பமயமாதலின் தாக்கம் அண்டார்டிக் பகுதியில் உள்ள பனிக்கட்டிகளை மட்டுமல்ல குளிர்சாதன பெட்டிகளில் உள்ள ஐஸ் கட்டிகளையும் முற்றிலுமாக உருக செய்துவிட்டது, மேலும் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு   என தொடர்ச்சியாக இயற்கை சீற்றங்கள் பூமியை புரட்டிபோட்டுகொண்டிருந்தது.   சுத்தமான காற்று, நிலம், நீர் என்று மனித இனத்தின் அனைத்து வாழ்வாதாரங்களும் குறைந்துவிட்டது. மேலும் தினம் தினம்  புதியதாய் உண்டாகும் கொடிய நோய்களினால் கூட்டம் கூட்டமாக மக்கள் மரணத்தை வரவேற்க தயாராகிவிட்டனர்.சொற்ப எண்ணிக்கையில் எஞ்சி இருக்கும் மனித இனத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உலக  நாடுகள் ஒன்று   பட்டு  பல வழிகளை ஆலோசிதுக்கொண்டிருந்த  தருணம்....                                     மீண்டும் தூரத்தில் அதே ஆங்கில பாடல் இம்முறையும் என் காதில் சரியாக விழவில்லை!!!!!!!!! போகட்டும்.................
அழிவின் எல்லையில் இருக்கும் சிலகோடி மக்களையாவது காபற்றிவிடவேண்டும் என்ற ஆதங்கத்துடன் உலக நாடுகளின் தலைவர்களும், விஞ்ஞானிகள், அறிஞர்கள், மத பெரியோர்கள் என பலரும் தங்களின் எண்ணங்களை வெளிபடுத்துகின்றனர். புதன், செவ்வாய், வியாழன் என இத்துனை நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்க பட்ட அனைத்து கிரகங்களுக்கும் செல்வதற்கான சாதக பாதகங்களை விவாதிடுகின்றனர். ஏற்கனவே பல கிரகங்களிலும் சென்று குடியேறிய மக்கள் முடிந்தவரை  அந்த கிரகங்களிலும் சுற்றுப்புழ சூழலை பூமியை விட மோசமான  நிலைமைக்கு மாற்றி விட்டு பூமியை நோக்கி  திரும்பிகொண்டிருக்கும்  இந்த  காலகட்டத்தில்  மீண்டும் அதே கிரகங்களுக்கு செல்வது என்பது நிரந்தர தீர்வாக இருக்காது  என்பதால்  கையில் இருக்கும் கடைசி வாய்ப்பும் நழுவி விட்டதே என அனைவரது முகத்திலும் ஒரு பயம் கலந்த சோகம் தெரியும் போது.........    என் காதில் மீண்டும் அதே பாடல் அதே இசை கேட்கிறது, ஏற்கனவே பலமுறை கேட்டது போல் இருக்கிறதே!!!!!!!!!!!அதை விடுங்கள்.................

தொடர்ந்து பல நாட்களாக இடைவேளை இன்றி நடைபெற்ற ஆலோசனை கூடத்தின் ஒரு நாள் பலநாடுகளை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள்  குழு சற்றே உற்சாகத்துடன்  பேச ஆரம்பிகிறது. மிக அதிக பொருட்செலவில் பல விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து  உருவாக்கிய ஒரு இயந்திரத்தை பற்றியது. இயந்திரம் என்பதை விட அது ஒரு அதிசய வாகனம் என்பதே சரி. அக்குழுவின் தலைவர் இந்த விவாதத்தில் பங்கேற்றிருக்கும் பல  இந்தியர்களுல் ஒரே தமிழன்  Dr.சர். பொட்ஸ்  (பல டாக்டர் பட்டங்கள்  பல நாடுகளின் உயரிய விருதுகள்,  பல ஆண்டுகள் தனது கண்டுபிடிபுகளுக்காக தொடர்ச்சியாக நோபல் பரிசை வாங்கிக்கொண்டே இருப்பவர் உங்கள் அனவருக்கும் தெரிந்த சாட்ச்சாத் நம்ம "பொடுசு" தாங்க)
தங்களது புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் க்ரூசியர் ++ ஐ பற்றி விவரிக்கலானார்.
நேனோ,  நானோ, நோநோ, ஏனோ, தானோ  என பல டெக்னாலஜிகலை பயன்படுத்தி உருவாக்கிய இந்த வாகனமானது ஒளியின்  வேகத்தை அசாதாரணமாக  ஓவர் டேக் செய்துவிடும்  எந்த கிரகத்திற்கும் சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ எளிதில்  சென்று வந்து விடலாம் முக்கியமாக காற்று, நீர், நெருப்பு, வெப்பம் என எந்த ஊடகதிளிருந்தும் தேவையான எரிபொருளை தானே பிரித்து எடுத்துக்கொள்ளும்  என்பதால் ஆண்டுகணக்கில் கூட இதில் பயணம் மேற்கொள்ளல்லாம் என்பதே இதன் சிறப்பு என்று  கூறி  முடிப்பதற்குல்  சுற்றிருப்பவர்கள்  வியப்பில்  கைதட்டி ஆரவரமிட ஆரம்பித்தனர்... இப்போதும் அந்த ஆங்கில பாடல் பின்னனியில் ஒலிப்பது கேட்கிறது, ஒலித்துகொண்டே இருக்கிறது ஏன் எனக்கு மட்டும் இந்த பாடல் ஒரு சரியான இடைவேலையில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று யோசிப்பதற்குல்.............   Dr.பொட்ஸ் பேச்சை தொடர்கிறார்....  
ஸ்பேஸ் க்ரூசியர் ++

ஸ்பேஸ் க்ரூசியர் ++ல் தனது குழுவினருடன் விண்வெளியில் பல சூரிய குடும்பங்களுக்கு  அப்பால் இதுவரை யாரும் முயற்சி செய்திடாத ஒரு கிரகத்தை சென்று ஆராயபோவதாகவும் அதில் மனித இனம் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும்  இந்த  ஆராய்ச்சிகாகவே தங்கள் வாகனம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்க,   மேலும் இந்த பயணத்தை  குறித்தும் ஆராய்ச்சி  பற்றியும்  இருந்த அனைவரது சந்தேகத்தையும் Dr.பொட்ஸ் பொறுமையாக தீர்த்துவைத்து தனது  பயண  திட்டத்தை  முழுமையாக விளக்கியவுடன்  அனைவரது முகத்திலும் சற்று நிம்மதி புன்னகை மலர்கிறது,  நம்பிக்கை பெருமூச்சி அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்க செய்ய........................... ஒலிக்கிறது  அதே ஆங்கில பாடல் இம்முறை சற்று அருகில் இன்னும் ஒரு முறை கேட்டால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவேன் அது என்ன பாடல் எங்கிருந்து ஒலிக்கிறது என்பதை........!!!!!

Dr.பொட்ஸ் பயணத்தை தொடர்ந்தாரா?  மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றினாரா? ஏன் இடைஇடையே தொடர்ந்து எனக்கு மட்டும் ஒரு  பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது அது என்ன பாடல்? 

போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும் பாகம் - 2ல் 

அதுவரை தோன்றும் உங்கல் யுகங்களை பின்னூட்டத்தில் பதியவும். 

10 comments:

காயலாங்கடை காதர் said...

செந்திலே!என்னா.....கலக்கு கலக்குறிங்க.
ஐய்யோ!!!!!!சுஜாதாவை இழந்த ஏக்கம் இந்த பதிப்பை கண்டவுடம் போய்விட்டது.
ஐய்யா!!!!! எங்களுக்கு குட்டி
சுஜாதா கிடைச்சாசி.வாழ்த்துக்கள் என்னும் பல பாகங்கள் வரவேற்கிறேன்.

பொடுசு said...

@காயலாங்கடை காதர்

வஞ்ஜ புகழ்ச்சி அணி என்பது இதுதானே????

hari krishnan said...

நல்லா எழுதி இருக்கீங்க பொடுசு.
ஆங்கில படத்தின் கதை கரு போல இருக்கிறது. good.
(ரூம் ல நிறைய இங்கிலீஷ் படம் DVD இருக்கும் போதே நினைச்சேன், இது போல பதிவு உங்களிடம் இருந்து வரும் என்று)

காயலாங்கடை காதர் said...

என்ன பொடுசு இப்படி சொல்லிடிங்க....
இது சாத் சாத் வஞ்சகமே இல்லாத புகழ்ச்சிங்க.

umasekhar said...

என்ன ஒரு வில்லத்தனம்.

உமாசெகர்.

எம் அப்துல் காதர் said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!

எம் அப்துல் காதர் said...

fiction களில் சுஜாதா நிறைய எழுதி இருக்கிறார். நீங்களும் அசத்துங்கள் boss!!

எம் அப்துல் காதர் said...

இன்ட்லி/ தமிழ்மண த்தில் இன்னும் இணைக்கலையா?? அப்ப தான் நிறைய பேர் படிக்க வருவார்கள். கமண்ட்ஸ் சில் வரும் word verification ஐ நீக்கி விடுங்கள்.

பொடுசு said...

@எம் அப்துல் காதர்

உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியை தந்தது ஆஹா பக்கங்கள் போலவே

நன்றிகள் கோடி

பொடுசு said...

@எம் அப்துல் காதர்

ஓஹோ இப்படி எழுதுனா அதுக்கு பேரு fiction ஆ...... தேங்க்ஸ்

Post a Comment

Related Posts with Thumbnails