Monday, August 30, 2010

நான் எங்கிருக்கிறேன்...!!!! - பாகம்-2அடிக்கடி கேட்கும் இந்த பாடலை என்னால் இன்னமும் கண்டுபிடிக்க முடியாதால் ஒருவேளை எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா வந்து விட்டதோ என்று ஆராயாமல் உடனடியாக  Dr.பொட்ஸ்ன்  ஆராய்ச்சி மையத்திற்கு செல்லுங்கள் ..... 

திட்டமிட்டபடி பயணத்தை தொடங்கும் நாள்.... பல்லாயிரகணக்கான மக்கள் "மனித இனத்தை காப்பாற்றுங்கள்" போன்ற வாசகங்கள் நிறைந்த பலகைகளுடனும் கோஷங்களுடனும்  Dr.பொட்ஸ்ன் ஆராய்ச்சி மையத்தை சுற்றி கூடி ஆரவரமிட்டபடி தங்களையும் தங்கள் வம்சத்தினரையும் ஏன் மனித இனத்தையே காப்பாற்ற வழிவகுக்கும் இந்த பயணத்திற்கு குழுவினரை வழியனுப்ப ஆவலோடு காத்திருகின்றனர். Dr.பொட்ஸ் தனது குழுவினருடன் புறபடுவதர்க்கு தயாராகி கொண்டிருக்கையில்  ஏதோதோ எண்ணங்கள் அவர்களை  சிறிது கலக்கமடைய செய்கிறது பயணத்தின் அபாயங்கள் மற்றும் அதற்கான பாதுகாப்பு? கால அவகாசம் இல்லாமையால் இது வரை எந்த சோதனை பயணமும்  செய்து பார்க்காத ஸ்பேஸ் க்ருசியர் ++?? பயணம் எத்தனை மாதங்கள் ஏன் ஆண்டுகள் வேண்டுமானாலும் தொடரலாம் அதுவரை மக்களின்  நிலைமை??? தனது கட்டுபாட்டு தளத்தினுடனான அல்லது பூமியுடன் தொடர்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால்???? இவ்வாறு பல கேள்விகள்.... எல்லாவற்றிற்கும் நம்பிக்கை என்ற ஒரே பதிலுடன் பயணத்திற்கான  கவுன்ட்டவுன் தொடங்குகிறது.   ...............6..5..4..3..2..1..0 இதோ விண்ணை நோக்கி சீறிக்கொண்டு புறப்டுகிறது  ஸ்பேஸ் க்ருசியர் ++ . புறப்பட்ட சில நொடிகளிலேயே பார்பவர்களின் கண்களை விட்டு மறைந்தது மட்டுமல்ல  இந்த பூமியை விட்டே வெளியேறியது.


சற்றே அதிக புகையுடனும் சப்தத்துடனும் கிளம்பியதில் மீண்டும் ஒலித்த அதே பாடல் கேட்கவில்லை நான் அதில் கவனம் கொள்ளவும் இல்லை.  மக்கள்  ஆரவாரமிட்டபடி  மகிழ்ச்சி  கடலில்  மூழ்கினர்  இதை  பார்த்து கொண்டிருக்கும் எனக்கு அந்த பாடல் ஒரு  பொருட்டாக தெரியவில்லை?   

 இனி விண்வெளியில்...
ஒவ்வொரு நாட்டிற்குமான தனிதனி விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட  இந்தியாவிற்கான பிரத்தியோகமான விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தகவல் தொடர்பு கருவிகள் மட்டுமே இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்பதாலும், ஒருங்கிணைந்த உலக ஆராய்ச்சி மையத்தின் தலைமை கட்டுப்பாட்டு தளம் என்பதாலும் சில ஆண்டுகளாக இதில் ஆராயப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த பயணம் தொடர்கிறது. இந்த ஸ்பேஸ் க்ருசியர் ++ ன் சூப்பர் பவர் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அவற்றுள் ஒன்று பயணிக்கும் போதே கடந்து  செல்லும்  கிரகங்களை  படம்  பிடித்து  உடனுக்குடன் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பிவிடும், இவ்வாறாக  அனுப்பப்படும்  புகைப்படங்கள் மூலமாகவும்   ஸ்பேஸ் க்ருசியர் ++ல் இருந்து அனுப்பப்படும்  பல்வேறு  சிக்னல்களின்  உதவியுடனும்  அந்தந்த கிரகங்களின் தன்மை, மனிதன் வாழ்வதற்கான சாத்தியகூறுகள், இயற்கை வளங்கள் என தேவையான அனைத்து விபரங்களையும் எளிதில் பட்டியல் இட்டுவிடலாம். இவ்வாறாக பல்வேறு ஆராய்ச்சி, தேடல்கள் மற்றும்  எதிர்பாராத ஆச்சிரியங்கள்,  அதிசயங்கள் என பயணம்  தொடர்ந்துகொண்டிருக்கிறது...!!! 


அவ்வப்போது  சரியான  இடைவெளியில்  அதே  பாடல்  என்  கவனத்தை  மீண்டும்  மீண்டும் திசை திருப்பினாலும் என் சிந்தனை இந்த பயணத்தை பற்றியே இருந்தது....


பயணத்தில்  சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள்.....


வழக்கம் போல்  Dr.பொட்ஸ் மற்றும் குழுவினர் கிடைக்கும்  ஒவ்வொரு சிறு தகவலையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும், பூமியில் உள்ள தங்களது ஆராய்ச்சி மையத்திற்கும்  தொடர்ந்து பகிர்ந்துகொண்டிருன்தனர். திருப்திகரமான  எந்த ஒரு தீர்வும்  இதுவரை கிடைக்காத நிலைமை, தகவல்  தொடர்பு  எல்லைக்கு வெளியே இன்னும் சில நொடிகளில் சென்றுவிடுவோம் என்பதை நன்கு அறிந்தாலும் பயணத்தை நிறுத்துவதாய் இல்லை. ஒருசில முக்கிய தகவல்களை ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பிவிட்டு தொடர்பு எல்லையை விட்டு வெளியேறியது ஸ்பேஸ் க்ருசியர் ++. மனித இனத்தை  அழிவிலிருந்து  காப்பாற்ற  சரியான  தீர்வு கிடைக்காமல் திரும்பபோவதில்லை என்ற மன உறுதியுடன்   Dr.பொட்ஸ் மற்றும் குழுவினர் தொடர்பு எல்லையை விட்டு  வெளியேற  ஆராய்ச்சி   மையகளில் ஒரே சலசலப்பு,  இச்செய்தி  எப்படியோ  மக்களிடம் பரவிவிட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்,  நானும்தான்...  காரணம்  இப்படி  ஒரு பயணத்திட்டம்  இருப்பதாக இதுவரை யாரிடமும் Dr.பொட்ஸ் தெரிவிக்கவில்லை. Dr.பொட்ஸ்  எங்கு சென்றார்?,  திரும்பி வருவரா?? எப்போது வருவார்??? அதுவரை  மக்களின்  நிலைமை????

என்ன கொடுமை சார் இது? இப்படி பல கவலைகளில்  இருக்கும்போது அதே ஆங்கில பாட்டு கேட்குது,   தேவைதானா? விடுங்க அத பத்தி அப்பறம் பார்காலம்...  


ஸ்பேஸ் க்ருசியர் ++ ஆராய்ச்சி மையங்களுக்கான தொடர்பு எல்லையை விட்டு வெளியேறியதே  தவிர நமது தொடர்பு எல்லையை விட்டு இன்னமும் வெளியரவில்லை வாருங்கள் தொடர்ந்து சென்று பார்ப்போம். பாகம் 3ல்.


அதுவரை தோன்றும் உங்கள் யுகங்களை பின்னூட்டத்தில் பதியவும்.

3 comments:

காயலாங்கடை காதர் said...

எனக்கு கூட இப்படிதான் நடுஇரவு 5 அல்லது 6 மணிக்கு அதே ஆங்கில பாடல் காதில் கொஞ்ச
கொஞ்ச இடைவெளியில் ஒலிக்கிறது.அது என்னன்னு கண்டுபுடிச்சா எனக்கு கொஞ்சம்
சொல்லுங்க டாக்டர் சார்.

அப்புறம் போறதுதான் போய்டீங்க அங்கே வியாழனுக்கும் சனிக்கும் இடையில்ல
நம்ம நாயர் ஒருத்தர் டீக்கடை போட்டிருக்கிறார் அவரு சாயங்காலம் ஆனா போண்டா,
பஜ்ஜி எல்லாம் போடுறார் பாருங்க என்னா டேஸ்டு.
அவரை பார்த்தா நான் கேட்டதா சொல்லுங்க.

hari krishnan said...

Dr.பொட்ஸ் எப்போ வருவார்? எப்படி வருவார்? அத பத்தி கவலை வேண்டாம். அவர் வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவார். (ரஜினி சார் அரசியலுக்கு வரும் முன் வந்துடுவார்)

(54 டிகிரி வெயில், 85% ஹுமிடிட்டி ல சுத்திட்டு வந்தா...?.!!..!!..?.. பாட்டு கேட்டுகிட்டு தான் இருக்கும். வைதீஸ்வரா.... இந்த புள்ளைங்கள நீதான்பா காப்பாத்தனும்.---காயலாங்கடைகாரரையும் சேர்த்து....)

எம் அப்துல் காதர் said...

அந்த சப்தம் தான் நம்ம மொபைலிலும் கேட்குதா. "நீங்க பேச விரும்பும் நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லை" என்று. நல்ல அருமையான பகிர்வு. இதை எங்களோடு பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்!!

Post a Comment

Related Posts with Thumbnails